Vijayakanth: தமிழ் சினிமாவில் நடிப்பதை விட்டு பல வருடங்கள் ஆகி விட்டது. வெளியில் பேசிய சில வருடங்கள். ஆனால் கூட இன்னமும் விஜயகாந்தின் மீது அந்த பாசம் திரை பிரபலங்களுக்கு மட்டுமல்ல ரசிகர்களுக்கும் குறையவில்லை. இன்று அவர் இறப்பு தமிழகத்தையே உலுக்கிவிட்டது.
கிட்டத்தட்ட 36 மணி நேரம் கடந்து அவர் இறுதி ஊர்வலமும் தொடங்கி முடியவே போகிறது. ஒரு சகாப்தமே மண்ணுக்குள் அடைய போகிறது. தமிழகம் மட்டுமல்லாமல் பல மொழி கலைஞர்களும் அஞ்சலி சொல்லி இருக்கின்றனர். இருக்கும் எல்லா தலைவர்களும் நேரில் வந்து கண்ணீர் சிந்தி விட்டு செல்வதை பார்க்க முடிகிறது. அப்படி வாழ்ந்த விஜயகாந்துக்கும் கருணாநிதிக்கும் இருக்கும் உறவு இன்னமும் ஸ்பெஷல் தானாம்.
இதையும் படிங்க: மனைவியே எனக்கு கண் கண்ட தெய்வம்.. பிரேமலதா குறித்து விஜயகாந்த் சொன்ன காதல் வார்த்தை..!
வல்லரசு படத்தின் க்ளைமாக்ஸ் ஷூட்டிங் மவுண்ட் ரோட்டில் நடந்து கொண்டு இருக்கிறது. 10 மணிக்கு மொத்த காட்சியையும் முடித்து விடலாம் என படக்குழு நினைத்து கொண்டு இருக்க அப்போது முதல்வர் கருணாநிதி 9 மணிக்கு அந்த வழியாக தான் கோட்டைக்கு செல்ல வேண்டியதாக இருந்ததாம். இதனால் அங்கிருந்தவர்களுக்கு என்ன செய்வது என்றே தெரியவில்லையாம்.
உடனே விஜயகாந்த் நேராக கலைஞருக்கு கால் செய்து விட்டார். அவரின் பிஏ சண்முகநாதனிடம் விஜயகாந்த் தான் எனக் கூறியவுடன் கலைஞரே போனை வாங்கிக்கொண்டாராம். பின்னர் விஜயகாந்த் இப்படி ஷூட்டிங் நடப்பதும் கொஞ்சம் டைம் வேண்டும் என்றும் கேட்டாராம். பொறுமையாக கேட்ட கலைஞர் டைமெல்லாம் இல்ல.
இதையும் படிங்க: ஏனுங்க புரமோஷனுக்கு வர முடியும்… துக்கம் கேட்க வரமுடியாதா? மீண்டும் சிக்கலில் சிக்கிய சிவகார்த்திகேயன், தனுஷ்..!
நீ நடி விஜி. நான் வேறு வழியாக கோட்டைக்கு செல்கிறேன் என சொல்லி ஆச்சரியப்படுத்தினாராம். இருவருக்கு இடையில் அத்தனை ஒரு பாசம் இருந்ததாக வல்லரசு படத்தின் இயக்குனர் மகாராஜன் தெரிவித்து இருக்கிறார்.
இயக்குனர் ஆர்.வி.உதயகுமார்…
தமிழ் சினிமாவில்…
நடிகர் தனுஷ்…
இன்று தமிழ்…
Nagarjuna: நாகர்ஜுனா…