விஜயகாந்துக்கு எதிரியே ராவுத்தர்தான்… அட இது தெரியாம போச்சே!!
விஜயகாந்தும் தயாரிப்பாளர் ராவுத்தரும் மிகவும் நெருங்கிய நண்பர்கள் என்பது நமக்கு தெரிந்த விஷயம்தான். நட்பு என்றால் எப்படி இருக்கவேண்டும் என்று எடுத்துக்காட்டாக விளங்கியது இவர்களின் நட்பு.
விஜயகாந்த்தின் வளர்ச்சியை மிகவும் உறுதுணையாக விளங்கியவர் இப்ரஹிம் ராவுத்தர். இருவருக்கும் இடையே உள்ள புரிதல் என்பது மிகவும் ஆச்சரியத்திற்குரிய ஒன்று. “உன்னை பெரிய நடிகனாக ஆக்கப்போறேன்டா” என விஜயகாந்திடம் அடிக்கடி கூறுவாராம் ராவுத்தர்.
விஜயகாந்த் நடிக்க வந்த புதிதில் ரஜினியின் “முரட்டுக்காளை” திரைப்படத்தில் வில்லனாக நடிக்க விஜயகாந்திற்கு வாய்ப்பு வந்தது. ராவுத்தரிடம் கேட்காமல் ஏவிஎம் நிறுவனத்தில் இருந்து விஜயகாந்த் முன்பணத்தை வாங்கிவிட்டார். இதனை அறிந்த ராவுத்தர் “நீ ஏன் வில்லனா நடிக்கிறதுக்கு ஒத்துக்கிட்ட. உன்னை நான் எவ்வளவு பெரிய கதாநாயகனாக ஆக்க ஆசைப்பட்டுகிட்டு இருக்கிறேன். ஆனால் நீ வில்லனாக நடிக்கிறதுக்கு அட்வான்ஸ் வாங்கிட்டு வந்துருக்க” என அவரிடம் இருந்து அட்வாண்ஸை பிடுங்கி திரும்ப ஏ வி எம்மிடமே தந்துள்ளார் ராவுத்தர்.
இது விஜயகாந்திற்கும் கோபத்தை ஏற்படுத்தவில்லை. அந்த அளவுக்கு இருவருக்குள்ளும் புரிதல் இருந்தது என்பது தான் உண்மை. ராவுத்தர் விஜயகாந்தை வைத்து “கேப்டன் பிரபாகரன்”, “புலன் விசாரணை” என பல திரைப்படங்களை தயாரித்துள்ளார். இவ்வாறு விஜயகாந்தின் வளர்ச்சியில் ஒரு முக்கிய பங்கு வகித்த ராவுத்தர் முதலில் விஜயகாந்தின் எதிரியாக இருந்தார் என்றால் உங்களால் நம்பமுடிகிறதா?
அதாவது பள்ளி காலங்களில் விஜயகாந்தும் ராவுத்தரும் பயங்கர எதிரியாம். இருவரும் அடிக்கடி அடிதடியில் ஈடுபடுவார்களாம். அதன் பின்பு தான் இருவரும் நண்பர்களாக ஆகியிருக்கிறார்கள். இத்தகவலை மீசை ராஜேந்திரன் ஒரு பேட்டியில் பகிர்ந்துகொண்டுள்ளார்.
சினிமாத்துறையில் நட்புக்கே இலக்கணமாக திகழ்ந்தவர்கள் பள்ளிக்காலங்களில் பயங்கர எதிரியாக இருந்திருக்கிறார்கள் என்பதை நினைத்துப்பார்க்க கொஞ்சம் வியப்பாகத்தான் இருக்கிறது.