27 எம்.எல்.ஏக்களை காக்க வைத்த புரட்சிக்கலைஞர்! எல்லாம் தம்பி விஜய்க்காகத்தான் - அமீர் சொன்ன சீக்ரெட்

by Rohini |
viji
X

viji

Actor Captain Vijayakanth: நேற்று அரசு மரியாதையுடன் கேப்டன் விஜயகாந்தின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது. இறுதிச்சடங்கில் பல்வேறு அரசியல் தலைவர்கள் கலந்து கொண்டு விஜயகாந்துக்கு உரிய மரியாதையை கொடுத்தனர்.

முன்னணி பிரபலங்கள் பலர் நேரடியாக வந்து கேப்டனுக்கு இறுதி அஞ்சலி செலுத்திவிட்டுச் சென்றனர். இந்த நிலையில் அவர் அலுவலகத்தில் விஜயகாந்தை வைத்த பொழுது அன்று இரவே நடிகர் விஜய் கேப்டனுக்குண்டான இறுதி அஞ்சலியை செலுத்தினார்.

இதையும் படிங்க: உங்க வீட்ல ஒண்ணுன்னா ஓடி வரமாட்டீங்க.. சிம்பு, தனுஷ், விஷால், சூர்யாவை கழுவி ஊற்றிய ப்ளூ சட்டை மாறன்!

கடும் இடிபாடுகளில் சிக்கி தன்மரியாதையை செலுத்த வந்தார் விஜய். அப்போது கேப்டன் ரசிகர்கள் ஒரு சில பேர் போ..போ..வெளியே போ.. துரோகி.. நன்றிகெட்டவனே என்று கோஷமிட்டபடி விஜய் மீது செருப்புகளையும் வீசி எறிந்தனர்.

இது பிரபலங்கள் மட்டுமில்லாது தமிழக மக்க்ள் மத்தியிலும் பெரும் அதிர்ப்தியை ஏற்படுத்தியது. அதற்கு காரணம் இது நாள் வரை தன்னை வளர்த்துவிட்ட விஜயகாந்தை பார்க்க விஜய் ஒரு போதும் செல்லவில்லை என்பதுதான்.

இதையும் படிங்க: பெரியண்ணாவுக்கு பெரிய மரியாதை.. ஒரு நிமிஷம் நின்னு அஞ்சலி செலுத்த முடியாதா சூர்யா?.. ப்ளூ சட்டை பொளேர்!

ஆனால் உண்மையிலேயே விஜய்க்கு நெருக்கமான ஒருவரிடம் விசாரித்த போது பிரேமலதாவிடம் பலமுறை விஜய் கேப்டனை பார்க்க அனுமதி கேட்டிருக்கிறார். பிரேமலதா தரப்பில்தான் விஜயை பார்க்க அனுமதி கொடுக்கப்படாமல் இருந்துள்ளனர்.

இந்த நிலையில் அமீர் சமீபத்தில் ஒருதகவலை கூறினார். விஜயகாந்த் எதிர்க்கட்சித்தலைவர் ஆனதும் அவரை பார்க்க அமீர் மற்றும் சேரன் சென்றார்களாம். இன்னொரு பக்கம் 27 எம்.எல்.ஏக்கள் காத்துக் கொண்டிருந்தார்களாம்.

இதையும் படிங்க: மேடையில் என்னிடம் பிரேமலதா சொன்னது! பாத்ரூம் கூட தனியாக போக முடியாத நிலை – ராதாரவி பகிர்ந்த சீக்ரெட்

இருந்தாலும் அமீர் மற்றும் சேரனை பார்த்ததும் கேப்டன் அவர்களிடம் பேசிக் கொண்டிருந்தாராம். அந்த எம்.எல்.ஏக்களுடன் நடிகர் விஜயும் காத்துக் கொண்டிருந்தாராம். அவர் வருகை அறிந்த கேப்டன் விஜயை மட்டும் உள்ளே அனுமதித்தாராம். அதன் பிறகு அமீர் , சேரன், விஜய் ஆகியோருடன் வெகு நேரம் பேசிக் கொண்டிருந்தாராம் விஜயகாந்த்.

Next Story