More
Categories: Cinema History Cinema News latest news

விஜயகாந்த் விஜய் காம்போவில் 4 படம் வந்திருக்கா?- இது தெரியாம போச்சே?

தமிழ் சினிமாவில் பல இயக்குனர்களை வளர்த்துவிட்ட பெருமை நடிகர் விஜயகாந்தைதான் சேரும். விஜயகாந்த் பெரும் கதாநாயகனாக இருந்த காலக்கட்டத்தில் பல இயக்குனர்களுக்கு தொடர்ந்து வாய்ப்பு கொடுத்துள்ளார்.

அப்படியாக இயக்குனர் எஸ்.ஏ சந்திர சேகருக்கும் கூட அதிக வாய்ப்புகள் கொடுத்துள்ளார். எஸ்.ஏ சந்திரசேகர் விஜயகாந்தை வைத்து இயக்கிய பல படங்கள் பெரும் ஹிட் கொடுத்துள்ளன. ஆனால் அவர் இயக்கிய பல படங்களில் கேமியோ கதாபாத்திரத்திலாவது விஜய்யை நடிக்க வைத்துள்ளார் எஸ். ஏ சந்திர சேகர்.

Advertising
Advertising

இதனால் சில விஜயகாந்த் படங்களில் குழந்தை கதாபாத்திரத்தில் விஜயகாந்தாக விஜய் நடித்துள்ளார். விஜய்யை நடிக்க வைப்பதற்காகவே படக்கதையை இப்படி எழுதியுள்ளார் எஸ்.ஏ சந்திரசேகர்.

வரிசையாக வந்த காம்போ படங்கள்:

அதில் அனைவரும் அறிந்த திரைப்படம் செந்தூர பாண்டி. 1993 இல் வெளியான இந்த திரைப்படம் எஸ்.ஏ சந்திரசேகரால் இயக்கப்பட்டது. இதில் விஜயகாந்தின் தம்பியாக விஜய் நடித்திருப்பார்.

1984 ஆம் ஆண்டு இதே போல விஜயகாந்த் நடித்து வெற்றி என்கிற திரைப்படம் வந்தது. இந்த படத்தையும் எஸ்.ஏ.சிதான் இயக்கியிருந்தார். இதில் கதாநாயகன் பேரே விஜய்தான். இதில் சின்ன வயது விஜயகாந்தாக விஜய் நடித்திருந்தார்.

1986 இல் வெளிவந்த வசந்த ராகம், 1981 இல் வெளிவந்த சட்டம் ஒரு இருட்டறை, ஆகிய திரைப்படங்களும் சந்திரசேகர் இயக்கத்தில் விஜயகாந்த் நடித்து வெளிவந்தது. இந்த படங்களிலும் சின்ன வயது விஜயகாந்தாக விஜய் நடித்துள்ளார்.

பின்னாட்களில் பேட்டியில் விஜய் கூறும்போது அந்த படங்களில் நடித்தது மூலம்தான் நடிப்பதற்கு நான் கற்றுக்கொண்டேன் என கூறியுள்ளார்.

Published by
Rajkumar

Recent Posts