“இப்படியெல்லாம் சொல்லிக்காட்டக் கூடாது” வடிவேலுக்கு நான் இதெல்லாம் பண்ணினேன்.. ஆனா?.. கொந்தளித்த விஜயகாந்த்

வடிவேலு-கோவை சரளா, வடிவேலு-பார்த்திபன் ஆகிய காம்போவை தொடர்ந்து மக்களால் மிகவும் ரசிக்கப்பட்ட காம்போ என்றால் அது விஜயகாந்த்-வடிவேலு காம்போ தான்.
“தவசி”, “எங்கள் அண்ணா” போன்ற பல திரைப்படங்களில் இவர்கள் இருவரின் காம்போ வயிறு குலுங்க சிரிக்க வைப்பவை. இப்போதும் தொலைக்காட்சிகளில் இவர்களது காம்போவை ரசித்து பார்ப்பவர்கள் பலர் உண்டு.
ஆனால் சில ஆண்டுகளுக்கு முன் இருவருக்கும் இடையே சில பிரச்சனைகள் எழுந்தது. கடந்த 2011 ஆம் ஆண்டு தேர்தலில் போட்டியிட்ட விஜயகாந்திற்கு எதிராக களமிறங்கிய வடிவேலு, திமுகவிற்கு ஆதராவாக பேசி வந்தார். பல இடங்களில் விஜயகாந்த்தை மிகவும் மோசமாக விமர்சித்து வந்தார்.
இச்சம்பவங்களுக்கு பின் அவர்கள் மீண்டும் இணையவே இல்லை. இணையவே இல்லை என்று சொல்வதை விட அவர்கள் இருவரும் திரைப்படங்களில் அவ்வளவாக தென்படவும் இல்லை.
குறிப்பாக எதிர்கட்சி தலைவராக உட்கார்ந்த விஜயகாந்த், அதன் பின் உடல் நிலை சரியில்லாத காரணத்தால் கள அரசியலில் இருந்து ஓய்வு பெற்றார். வடிவேலு சொற்ப திரைப்படங்களில் தான் நடித்தும் வருகிறார்.
இந்த நிலையில் காமெடி நடிகர் மீசை ராஜேந்திரன் வடிவேலுவுடனான ஒரு மறக்க முடியாத அனுபவத்தை சமீபத்திய பேட்டி ஒன்றில் பகிர்ந்துள்ளார். மீசை ராஜேந்திரன் விஜயகாந்த் கட்சியை சேர்ந்தவர். மீசை ராஜேந்திரன் வடிவேலுவுடன் சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.
இவ்வாறு இருக்க வடிவேலு நடித்து வந்த ஒரு திரைப்படத்தில் மீசை ராஜேந்திரன் அவருடன் நடிப்பதாக இருந்ததாம். ஆனால் வடிவேலு விஜயகாந்தை காரணம் காட்டி மீசை ராஜேந்திரன் நடிக்கக்கூடாது என கூறிவிட்டாராம்.
இந்த செய்தி விஜயகாந்திற்கு செல்ல, அவர் மீசை ராஜேந்திரனை அழைத்து இது குறித்து விசாரித்திருக்கிறார். அப்போது “இதெல்லாம் சொல்லிக்காண்பிக்ககூடாது. இருந்தாலும் உன்னை அவமானப்படுத்துனதுனால இத சொல்றேன். சின்ன கவுண்டர் படம் நடிக்கும்போது வடிவேலு கிட்ட மாத்து துணி கூட கிடையாது. நான் தான் வடிவேலுக்கு நிறைய வேஷ்டி சட்டை வாங்கித் தந்தேன்” என விஜயகாந்த் வருத்தத்துடன் கூறியிருக்கிறார்.