இந்த படம் ஓடுமா?!.. பயந்து போன இப்ராஹிம் ராவுத்தர்… கோபப்பட்ட விஜயகாந்த்….

0
242
ibrahim

Vijayakanth: விஜயகாந்துக்கு எல்லாமுமாக இருந்தவர் இப்ராஹிம் ராவுத்தர். விஜயகாந்த்தின் இளமை காலம் முதலே அவருக்கு நெருங்கிய நண்பராக இருந்தவர் இவர். சினிமாவில் நுழைய ஆசைப்பட்டு விஜயகாந்த் சென்னை வந்தபோது அவருடனே வந்தவர்தான் இப்ராஹிம் ராவுத்தார். கதாசிரியர் ஆக வேண்டும் என்கிற ஆசை அவருக்கு இருந்தது.

இருவருமே சினிமாவில் முயற்சி செய்தனர். ராவுத்தருக்கு வாய்ப்புகள் கிடைக்கவில்லை. விஜயகாந்த் பல அவமானங்களை தாண்டி சில வாய்ப்புகளை பெற்றார். துவக்கத்தில் அவரின் படங்கள் ரசிகர்களிடம் வரவேற்பை பெறவில்லை. அதன்பின் எஸ்.ஏ.சி-யின் இயக்கத்தில் சட்டம் ஒரு இருட்டறை என்கிற படத்தில் நடித்தார்.

இதையும் படிங்க: கேப்டன் விஷயத்தில் விஜய் சொன்னது இதுதான்! ‘கோட்’ படத்தில் இருக்கும் ட்விஸ்ட்

அந்த படத்தின் வெற்றி விஜயகாந்தை ரசிகர்களிடம் பிரபலப்படுத்தியது. அதன்பின் தொடர்ந்து படங்களில் நடித்தாலும் அந்த படங்கள் ஓடவில்லை. அதோடு, விஜயகாந்துக்கு டப்பிங் குரலே கொடுக்கப்பட்டது. அதன்பின் மீண்டும் எஸ்.ஏ.சி இயக்கத்தில் சாட்சி என்கிற படத்தில் நடித்தார்.

அந்த படம் ஹிட் அடித்தது. விஜயகாந்துக்கு அதிக பட வாய்ப்புகள் வர துவங்கியதும் அவரின் கால்ஷூட்டை பார்த்துக்கொள்வது , சம்பளம் பேசுவது என எல்லாவற்றையும் அவரின் நண்பர் இப்ராஹிம் ராவுத்தரே பார்த்துக்கொண்டார். ராவுத்தரின் சொல்லுக்கு கட்டுப்பாடுவார் விஜயகாந்த்.

ஒருகட்டத்தில் இப்ராஹிம் ராவுத்தர் பிலிம்ஸ் என்கிற நிறுவனத்தை துவங்கி விஜயகாந்த் அதில் நடித்தார். பூந்தோட்ட காவல்காரன், உழவன் மகன், ராஜ துரை, கருப்பு நிலா, தர்மா, சிம்மாசனம், புலன் விசாரணை, கேப்டன் பிரபாகரன் என் பல படங்கள் அப்படி உருவானது.

இதையும் படிங்க: விஜயகாந்த் இறப்புக்குப் பிறகு அப்படி ஒரு ஃபீலிங்காம்…. மனதளவில் நொந்து போன ராதாரவி

விஜயகாந்தின் பல படங்களுக்கு கதாசிரியராகவும், வசனகர்த்தாவாகவும் வேலை செய்தவர் லியாகத் அலிகான். இவர் சமீபத்தில் அளித்த பேட்டியில் ‘ராவுத்தரின் தயாரிப்பில் விஜயகாந்த் நடித்து படங்கள் வெளியாகும்போது வேறொரு நடிகரின் படம் வெளியானால் அவர் பயப்படுவார். என்னிடம் ‘அண்ணே நம்ம படம் ஓடுமா?’ என கேட்டுக்கொண்டே இருப்பார். நாங்கள் பேசுவதை வெளியே இருந்து கேட்டுவிட்டு உள்ளே வரும் விஜயகாந்த் கோபப்படுவார். ‘என் படம் ஓட வேண்டும் எனில் ஓடும். இவன் ஏன் பயப்படுகிறான்? என கேட்பார்.

அதேபோல், விஜயகாந்த் வேறு படங்களில் நடித்து கொண்டிருக்கும் போது வேறு சில நடிகர்களிடம் கால்ஷீட் வாங்கி ராவுத்தர் சில படங்களை தயாரித்தார். இது விஜயகாந்துக்கு பிடிக்கவில்லை. ‘நான் இருக்கும் போது எதுக்கு வேற நடிகர்களை வச்சி இவன் படம் எடுக்கிறான்?’ என என்னிடம் சொல்லி வருத்தப்படுவார்’ என லியாகத் அலிகான் அந்த பேட்டியில் சொல்லியிருக்கிறார்.

விஜயகாந்துக்காக ராவுத்தர் திருமணமே செய்துகொள்ளவில்லை. ஆனால், திருமணத்திற்கு பின் பிரேமலதா தலையீட்டால் விஜயகாந்தும், ராவுத்தரும் பிரிந்துவிட்டது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: இந்த சப்ஜெக்ட்டுக்கு உயிர் இருக்கு!.. வேட்டையன் அப்டேட் சொன்ன லைக்கா!….

google news