1992ம் வருடம் நாளைய தீர்ப்பு என்கிற திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் நடிக்க துவங்கியவர்தான் விஜய். ஆரம்பத்தில் இவர் நடித்த திரைப்படங்கள் பெரிதாக ஓடவில்லை. பூவே உனக்காக திரைப்படம் இவருக்கு ஒரு முக்கிய படமாக அமைந்தது. அதன்பின் விஜயின் வளர்ச்சியை யாராலும் தடுத்து நிறுத்த முடியவில்லை கடந்த 33 வருடங்களாக தமிழ் சினிமாவில் அதிகம் செலுத்தி வருகிறார் விஜய் இவருக்கென பெரிய ரசிகர் கூட்டம் இருக்கிரது. இவருக்கு நிறைய பெண் ரசிகைகளும் உண்டு.
கோட் படத்தில் நடித்துக் கொண்டிருந்தபோது அடுத்து நடிக்கவுள்ள படம் எனது கடைசி திரைப்படம். அதன்பின் தீவிர அரசியலுக்கு செல்லப் போகிறேன் என்று விஜய் அறிவித்தார். விஜய் சினிமாவிலிருந்து விலகப்போகிறார் என சொல்லியதால் அவரின் இடத்தை யார் பிடிக்கப் போகிறார் என்கிற எதிர்பார்ப்பும், கேள்வியும் ரசிகர்கள் மத்தியில் எழுந்தது.

கோட் படத்தின் இறுதி காட்சியில் சிவகார்த்திகேயனிடம் தனது துப்பாக்கியை கொடுத்து ‘துப்பாக்கிய பிடிங்க சிவா’ என்ற வசனம் பேசினார் விஜய். இதையடுத்து விஜயின் இடத்தை சிவகார்த்திகேயன்தான் பிடிப்பார்.. அதை விஜயே சொல்லிவிட்டார் என பலரும் பேசினார்கள்.
ஆனால் சிவகார்த்திகேயன் அதை மறுத்தார் ‘30 வருடங்களுக்கு மேல் உழைத்து விஜய் சார் அந்த இடத்தை பிடித்திருக்கிறார். அதை யாராலும் பிடிக்க முடியாது’ என்று மேடைகளில் பேசினார். அதேநேரம் அடுத்த விஜயாகும் ஆசை அவரிடம் இருக்கிறது என சினிமா விமர்சனங்கள் தொடர்ந்து சொல்லி வருகிறார்கள்.
இந்நிலையில், நேற்று மலேசியாவில் நடந்த ஜனநாயகன் இசை வெளியீட்டு விழாவில் விஜயிடம் இது பற்றி கேள்வி கேட்கப்பட்டது ‘உங்கள் இடத்தை யாராலும் நிரப்ப முடியாது என்று நாங்கள் நம்புகிறோம்.. நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்/’ என்று கேட்டதற்கு ‘யாரை எங்கு வைக்க வேண்டுமென மக்களுக்கு தெரியும்.. அவர்கள் பார்த்துக் கொள்வார்கள்’ என்று சுருக்கமாக பதில் சொன்னார் விஜய்.
