வயதான நடிகர்கள் இளம் வயது கதாநாயகிகளுடன் நடிப்பது ஏன் தெரியுமா?? ஒரு வேளை இதுதான் உண்மையோ!!
சினிமா ரசிகர்கள் பலரும் டாப் நடிகர்களை கொண்டாடினாலும் ஒரு சில ரசிகர்கள், பேத்தி வயதில் இருக்கும் நடிகைகளுடன் ஏன் இந்த டாப் ஹீரோக்கள் ஜோடி போட்டு நடிக்கிறார்கள் போன்ற விமர்சனங்களை ஏவுவது உண்டு.
தமிழ் சினிமாவை பொறுத்தவரை ரஜினிகாந்த்தின் மீது இது போன்ற விமர்சனங்கள் எப்போதும் உண்டு. ஆனால் சமீப காலமாக ரஜினிகாந்த் மிகவும் இளவயது ஹீரோயின்களுடன் நடிப்பதை தவிர்த்துவிட்டார். ஆனால் தெலுங்கில் பாலகிருஷ்ணா, சிரஞ்சீவி ஆகியோரின் மீது இது போன்ற விமர்சனங்கள் வைக்கப்படுவது உண்டு.
சமீபத்தில் சிரஞ்சீவி நடிப்பில் வெளிவந்த “வால்டர் வீரய்யா” திரைப்படத்தில் ஸ்ருதி ஹாசன் ஜோடியாக நடித்திருந்தார். மேலும் சத்யராஜ் சிரஞ்சீவிக்கு அப்பாவாக நடித்திருந்தார். அதே போல் பாலகிருஷ்ணா நடிப்பில் வெளிவந்த “வீர சிம்ஹா ரெட்டி” திரைப்படத்திலும் ஸ்ருதி ஹாசனே கதாநாயகி.
இந்த நிலையில் பல ஆண்டுகளுக்கு முன்பு ஒரு பேட்டியில் கலந்துகொண்ட நடிகர் விஜயகாந்த்திடம் இது குறித்து ஒரு கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு விஜயகாந்த் அளித்த பதில் என்ன தெரியுமா?
இதையும் படிங்க: சிவாஜி கணேசனுக்கு நடிகர் திலகம்ன்னு பெயர் வந்தது எப்படி தெரியுமா?? ஒரு சுவாரஸ்ய தகவல்…
“50 வயது விஜயகாந்த்துக்கு எதற்கு 18 வயது கதாநாயகி?” என்று ஒரு கேள்வி விஜயகாந்த்திடம் அப்பேட்டியில் கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த விஜயகாந்த்,“ஆமாம், எனக்கு வயதாகிவிட்டது. நீங்கள் சொல்வது சரிதான். ஆனால் பழைய ஹீரோயினை ஜோடியாக நடிக்க வைத்தால் நீங்கள் பார்ப்பீர்களா? ரசிகர்கள் ஏன் அவ்வாறு இருக்கிறார்கள்? ரசிகர்களுக்காகத்தானே நாங்கள் அவ்வாறு நடிக்கிறோம்” என கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.