நாடோடி மன்னன் படத்தை எடுப்போமான்னு கேட்ட விஜயகாந்த்... இது எப்போ நடந்தது?

சுந்தரி பிலிம்ஸ் தயாரிப்பாளர் கேப்டன் விஜயகாந்த் உடனான தனது அனுபவங்களை பிரபல தயாரிப்பாளரும், விமர்சகருமான சித்ரா லட்சுமணனிடம் பகிர்ந்துள்ளார். வாங்க என்ன சொல்றாருன்னு பார்ப்போம்.

விஜயகாந்த் சாரை வச்சி நான் படம் பண்ணல. ஆனா படத்துக்கு 60 லட்ச ரூபா அட்வான்ஸ் கொடுத்தேன். செல்வா டைரக்ஷன்ல 'ஞான ஒளி' படத்துல அவரையும், சத்யராஜையும் வச்சி எடுக்கலாம்னு நினைச்சோம். ஆனா அதுல தாத்தா கேரக்டர் வந்ததால பண்ண மாட்டேன். வேணாம்னுட்டாரு. மலையாளத்துல மம்முட்டி நடிச்ச 'ராஜமாணிக்கம்' படத்தை ரீமேக் வாங்கி பண்ணலாம்னு நினைச்சோம்.

இதையும் படிங்க... பேர் சொல்லி கூப்பிட்டதற்கு சந்திரமுகியாக மாறிய தேவயானி! வேட்டையன் ரூபத்தில் அடக்கிய மணிவண்ணன்

ஆனா அதை பிரேமலதா பார்த்துட்டு வேணாம்னுட்டாங்க. அப்புறம் மாதேஷ் டைரக்ஷன்ல 'அரசாங்கம்' பண்ணினாங்க. அதை எங்கிட்ட சொன்னாரு. அது கனடால சூட்டிங். வேணாம்னுட்டோம். அப்புறம் விக்ரமன் சார் டைரக்ஷன்ல படம் பண்ணலாம்னு சொன்னாங்க. அதுக்கு அட்வான்ஸ் கொடுக்கப் போனோம்.

'பரத் நடிச்ச 'சென்னைக் காதல்' முடியட்டும்'னு சொன்னாரு. ஆனா அவரு வாங்கல. அப்புறம் அந்தப்படத்தை சிவா சார் பண்ணுனாராம். அப்புறம் அரசியல் அது இதுன்னு பிசியாகிட்டாரு. அப்புறம் அட்வான்ஸ் வாங்கின 30 லட்சத்தைத் திருப்பிக் கொடுத்துட்டாரு. அப்புறம் உடல்நிலை சரியில்லாம இருந்ததால அவருக்கிட்ட அந்தப் பணத்தைக் கேட்கல.

அப்போ நான் 'ஜன்னலோரம்' படம் பண்ணினேன். அவரு எதிர்க்கட்சி தலைவரா இருந்தாரு. அப்போ என்னைப் பத்தி என்னோட பிரச்சனையைப் பற்றி யாரோ சொல்லிருப்பாங்க போல. பார்த்தசாரதி எம்எல்ஏ. நிறைய தடவை போன் போட்டாரு. கேப்டன் பார்க்கணும்னு சொன்னாரு.

உடனே மறுநாள் போய் பார்த்தேன். 'என்னய்யா முருகன் இப்படி பண்ணிடடு இருக்குற? கேள்விப்பட்டேன்.. கஷ்டமா இருக்குய்யா... ஏன் பார்த்து பண்ணக்கூடாதா..? ஏன் இப்படி போயி பிரச்சனைல மாட்டுற? இப்ப நான் நடிச்சிக் கொடுத்தா உதவுமாய்யா?'ன்னு கேட்டாரு. நான் ஒண்ணுமே சொல்லல. சிரிச்சிக்கிட்டு இருந்தேன். 'நாடோடி மன்னன் படத்தைப் பண்ணிக் கொடுத்தா உதவுமா?'ன்னு கேட்டாரு.

இதையும் படிங்க... சொத்தை விற்று கில்லி படத்தை ரிலீஸ் செய்த தயாரிப்பாளர்… அப்படி என்ன சோதனை?

'ஏதாவது உனக்கு ஹெல்ப் வேணும்னா பண்ணித் தாரேன்'னாரு. கடைசில அவரு அமெரிக்காவுக்குப் போகும்போது மீட் பண்ணினேன். ரொம்ப அன்பா பழகுனாரு. அது எல்லாம் உண்மையிலயே மறக்க முடியாத அனுபவங்கள். அவரு அன்னைக்கு நல்ல நிலைமையில இருந்தா படம் பண்ணிக் கொடுத்திருப்பாரு. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Related Articles
Next Story
Share it