More
Categories: Cinema News latest news

விஜயகாந்த் கொடை வள்ளலாக மாறியது ஏன்?? இதுக்கு பின்னால் இப்படி ஒரு சோக கதையா??

“அள்ளிக்கொடுத்தவர் எம்.ஜி.ஆர், அதனை நமக்கு சொல்லிக்கொடுத்தவர் விஜயகாந்த்” என்று ஒரு முறை சத்யராஜ், ஒரு பொது மேடையில் விஜயகாந்தை புகழ்ந்து கூறினார். அது வெறும் முகஸ்துதிக்காக சொல்லப்பட்ட வார்த்தைகள் அல்ல. அந்த வார்த்தைகளுக்கு பின்னால் உண்மையும் இருக்கிறது.

கருப்பு எம்.ஜி.ஆர்

Advertising
Advertising

விஜயகாந்த்தை கேப்டன் என்று செல்லமாக அழைப்பது உண்டு. அதே போல் அவரை கருப்பு எம்.ஜி.ஆர் என்று நெகிழ்ச்சியோடு அழைப்பவர்கள் பலர் உண்டு. என்.எஸ்.கிருஷ்ணன், எம்.ஜி.ஆர் ஆகியோரின் வரிசையில் கொடை வள்ளலாக திகழ்ந்து வந்தவர் விஜயகாந்த்.

Vijayakanth

அவரது அலுவலகத்தில் எப்போது போனாலும் சாப்பாடு தயாராகிக்கொண்டே இருக்குமாம். பசி என்று வருபவர்களை வயிறு நிறைய சாப்பிட வைத்து வயிறார அவர்களை திருப்பி அனுப்புவார். அதே போல் உதவி என்று வருபவரை வெறும் கையோடு திரும்ப அனுப்ப மாட்டார்.

ஒரே சாப்பாடு

மேலும் அவரது திரைப்படங்களின் படப்பிடிப்பில், விஜயகாந்த் என்ன வகையான உணவை சாப்பிடுகிறாரோ, அந்த உணவுதான் கடை நிலை ஊழியர்கள் வரைக்கும் பரிமாறப்படும். இவ்வாறு அன்போடு அரவணைத்து அனைவரையும் சமமாக நடத்துபவர் விஜயகாந்த்.

கொடை வள்ளலுக்கு பின்னால் ஒரு சோக கதை

1979 ஆம் ஆண்டு வெளியான “இனிக்கும் இளமை” என்ற திரைப்படத்தில்தான் விஜயகாந்த் அறிமுகமானார். இதில் சுதாகர் கதாநாயகனாக நடித்திருந்தார். இவருக்கு ஜோடியாக ராதிகா நடித்திருந்தார். இதில் விஜயகாந்த், அருண் என்ற கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தார்.

இத்திரைப்படத்தை தொடர்ந்து “அகல் விளக்கு” என்ற திரைப்படத்தில் நடித்தார். ‘அகல் விளக்கு” திரைப்படத்திற்கு பிறகு தனது அடுத்த திரைப்படத்தின் படப்பிடிப்பின்போது ஒரு நாள் விஜயகாந்த் சாப்பிட்டுக்கொண்டிருந்தாராம். அப்போது ஹீரோ படப்பிடிப்பு தளத்திற்குள் நுழைய, அங்கிருந்த ஒருவர் விஜயகாந்த் சாப்பிடுவதை தடுத்து நிறுத்தி, “ஹீரோ வந்துட்டாரு” என கூறினார்களாம்.

இதையும் படிங்க: இந்த காமெடி நடிகர் சார்பட்டா பரம்பரையை சேர்ந்தவரா?? இவ்வளவு நாள் இது தெரியாம போச்சே!!

Vijayakanth

இது குறித்து விஜயகாந்த் சில ஆண்டுகளுக்கு முன்பு ஒரு பேட்டியில் பகிர்ந்துகொண்டிருக்கிறார்.

“ஒரு படத்தின் ஷூட்டிங்கில் சாப்பிடலாம் என கை வைத்தபோது ஹீரோ வந்துட்டார் வாங்க என அழைத்துக்கொண்டு போய்விட்டார்கள். சாப்பிடக்கூட விட மாட்டிக்காங்களே என்று இருந்தது.

எனது ராவுத்தர் தயாரிப்பு கம்பெனி தொடங்கிய பின் படப்பிடிப்பில் பணியாற்றுபவர்களுக்கு நன்றாக சாப்பாடு போட வேண்டும் என முடிவு செய்தேன். முன்பெல்லாம் பொட்டணத்தில்தான் சாப்பாடு போடுவார்கள். முதன்முதலில் இலை வைத்து சோறு போட வேண்டும் என்ற முறையை கொண்டு வந்தது நான்தான். இதனை சொல்வதால் என்னை திமிர் பிடித்தவன் என்று நினைத்தாலும் பரவாயில்லை.

Vijayakanth

நான் சாப்பிடுவதுதான் படப்பிடிப்பில் இருக்கும் அனைவரும் சாப்பிட வேண்டும் என முடிவு எடுத்தேன். நான் கூல் டிரிங்க்ஸ் சாப்பிட்டால் அனைவரும் கூல் டிரிங்க்ஸ் சாப்பிட வேண்டும், நான் மட்டன் சாப்பிட்டால் அனைவரும் மட்டன் சாப்பிட வேண்டும். இவ்வாறு முடிவெடுத்த பிறகு அதை நடைமுறைப்படுத்தினேன்” என கூறியிருந்தார். இவ்வாறு விஜயகாந்த், கொடை வள்ளல் ஆவதற்கு பின்னால் இப்படி ஒரு சோக கதை இருந்திருக்கிறது.

Published by
Arun Prasad

Recent Posts