Cinema News
ரோப் அறுந்து 20 அடி பள்ளத்தில் விழுந்த விஜயகாந்த்.. அடுத்து அவர் சொன்ன சம்பவம் தான் ஹைலைட்…
கேப்டன் விஜயகாந்த் திரைப்படங்கள் என்றாலே பக்கா ஆக்சன் கமர்சியல் ஹீரோ. அனல் பறக்கும் பன்ச் வசனங்கள் கம்பீரமான உடல் மொழி, அதே கம்பீரமான குரல் இது தான் நமது ஞாபகத்துக்கு வரும்.
அந்தளவுக்கு தனது திரைப்படங்கள் மூலம் தனது ரசிகர்கள் மனதில் ஆக்சன் விதையை தூவி மரமாக வளர்ந்து நிக்கிறார் கேப்டன் விஜயகாந்த். அனனைவருக்கும் பிடிக்கும் ஆக்சன் கமர்சியல் விஜகாந்த படங்களுக்கு ஓர் மணிமகுட திரைப்படம் என்றால் அது கேப்டன் பிரபாகரன் திரைப்படம் தான்.
அந்த படத்தை பிரமாண்டமாக ஆர்.கே.செல்வமணி இயக்கி இருந்தார். இது விஜயகாந்தின் 100 வது திரைப்படமாக அமைந்தது. எந்த ரஜினி, கமல் போன்ற பெரிய ஹீரோகளுக்கு கூட அவர்களது 100வது படம் விஜயகாந்தின் 100வது படம் அளவுக்கு பேர் வாங்கி கொடுத்தது இல்லை அந்தளவுக்கு பெரிய வெற்றியை கொடுத்தது.
இந்த பட அனுபவங்களை இயக்குனர் ஆர்.கே.செல்வமணி குறிப்பிட்டார். அதாவது, ஒரு காட்சியில் ஒருரோப் கட்டி சண்டை எடுத்து கொண்டு இருந்தோம். அந்தசமயம் , ரோப் அறுந்து 20 அடி பள்ளத்தில் விஜயகாந்த் விழுந்துவிட்டார். அங்கே பாறை இருந்தது. நாங்கள் பதறிவிட்டோம். அவருக்கு அடி பட்டு விட்டது.
இதையும் படியுங்களேன் – கமலின் ஆஸ்கர் லெவல் திரைப்படம் நல்லாவே இல்லை.! அதிர வைத்த அப்பட ஹீரோயின்..
இருந்தாலும் அந்த வலியை அவர் வெளிக்காட்ட வில்லை. மாறாக ஒரு காட்சி உடனே வைத்து விடு என கூறினாராம். இயக்குனர் ஏன் என்று கேட்கவே, ‘ எனக்கு அடி பட்டு விட்டது என தெரிந்தால் உடனே சண்டை இயக்குனர் வேறு கடினமான காட்சிகளை வைக்க மாட்டார். அதனால் நீங்கள் உடனே அடுத்த காட்சி எடுத்தால் நான் நார்மலாக இருப்பது போல நினைத்து கொள்வார் என ரகசியமாக இயக்குனரிடம் கேட்டுள்ளார் விஜயகாந்த்.
படம் நன்றாக வர வேண்டும். அதற்கு என்னெல்லாம் செய்ய வேண்டும் என ஒவ்வொரு விஷயத்திற்கும் சிந்தித்து தான் விஜயகாந்த் வேலை செய்வார் என ஆர்.கே.செல்வமணி ஒரு நேர்காணலில் குறிப்பிட்டார்.