இப்பவும் ஸ்மார்ட்டாதான் இருக்காரு!...மகனின் பிறந்த நாளை கொண்டாடிய விஜயகாந்த்...
தமிழில் பல ஹிட் படங்களை கொடுத்தவர் நடிகர் விஜயகாந்த். தேமுதிக எனும் கட்சியை துவங்கி அரசியலும் கால் பதித்தவர். தமிழக சட்டசபையில் எதிர்கட்சி தலைவராக அமர்ந்தவர். ஆனால், அவரின் முன் கோபம் காரணத்தால் கடுமையாக கிண்டலடிக்கப்பட்டவர். மேலும் உடல் நிலை காரணமாக தீவிர அரசியலில் இருந்து ஒதுங்கியுள்ளார்.
விஜயகாந்தை பொறுத்தவரை அவரால் சரியாக பேச முடியவில்லை மற்றும் மற்றவர் உதவியின்றி நடக்கவும் முடியாத நிலையில் இருக்கிறார். இப்படி இருக்க அவர் எப்படி நடிப்பார் என்கிற சந்தேகம் பலருக்கும் இருக்கிறது. அவ்வப்போது வெளியாகும் புகைப்படங்களை வைத்தே அவர் எப்படி இருக்கிறார் என்பது ரசிகர்களுக்கு தெரிய வருகிறது.
சில நாட்களுக்கு முன்பு அவரின் ஒரு புகைப்படம் வெளியாகி தேமுதிக தொண்டர்களுக்கும், அவரின் ரசிகர்களுக்கும் அதிர்ச்சியை கொடுத்தது.
விஜயகாந்தின் தோற்றம், அவர் மிகவும் வயதானவர் போல் மாறிவிட்டதுதான் இந்த அதிர்ச்சிக்கு காரணம்.ஆனால், விஜயகாந்த் அந்த அளவுக்கெல்லாம் இல்லை என்பதே உண்மை.
இதை நிரூபிக்கும் வகையில் தனது இளைய மகன் சண்முக பாண்டியனின் பிறந்தநாளை அவர் குடும்பத்துடன் கொண்டாடிய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.