விஜயகாந்திற்கு கதை சொல்ல மூன்று கண்டிஷன்கள்.. அதிலும் பொய் கூறிய முருகதாஸ்...

by Akhilan |   ( Updated:2022-10-25 13:24:04  )
முருகதாஸ்
X

முருகதாஸ்

தமிழ் சினிமாவின் மாஸ் ஹிட் நாயகனாக விஜயகாந்திற்கு கதை சொல்ல அப்போது இயக்குனர்களுக்கு மூன்று கண்டிஷன்கள் கூறப்படுமாம். அதற்கு யார் ஓகே சொல்கிறார்கள் என்பதை பொறுத்தே அவர் விஜயகாந்திடம் அழைத்து செல்லப்படுவார் என்ற தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

முருகதாஸ்

முருகதாஸ்

விஜயகாந்தின் அலட்டல் இல்லாத ஆக்‌ஷன் படமாக அமைந்தது ரமணா. இப்படத்தினை ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கி இருந்தார். இப்படத்தின் கதை முருகதாஸ் வாழ்க்கையில் நடந்த உண்மை சம்பவமாம். இறந்துபோன தன்னோட அப்பாவுக்கு டெத் சர்ட்டிஃபிகேட் வாங்க முருகதாஸ் முயற்சி பண்ணப்போ அவருக்கு நடந்த அலைகழிப்புகளை உண்மையாக திரைக்கதையில் எழுதி அப்ளாஸ் வாங்கினார்.

அந்த சமயத்தில் விஜயகாந்திற்கு கதை சொல்ல இயக்குநர்களுக்கு மூன்று கண்டிஷன்கள் போடுவார்களாம். அதில் ஒன்று நெகட்டிங் கிளைமேக்ஸ் இருக்க கூடாது என்பதே. இதை கேட்ட முருகதாஸ் சரி என்று ஒப்புக்கொண்டு தான் கதை சொல்ல சென்றாராம். இருந்தும் அவருக்கும் ஒரு பயம் இருந்ததாம். கிளைமேக்ஸ் சொல்லி முடித்ததும் கேப்டன் முகத்தினை பார்த்தாராம் முருகதாஸ்.

முருகதாஸ்

முருகதாஸ்

சிரித்துக்கொண்டே விஜயகாந்த் இந்த கதைக்கு இது தான் சரியான கிளைமேக்ஸாக இருக்கும். நான் செய்கிறேன் என உடனே ஓகே சொல்லி விட்டாராம்.

Next Story