என்னய்யா இவர் மனுஷனா பேயா?.. 72 மணிநேரம் தூங்காமல் படப்பிடிப்பில் கலந்து கொண்ட கேப்டன்!..
கேஆர் இயக்கத்தில் விஜயகாந்த் நடிப்பில் 1996ஆம் ஆண்டு வெளியான படம் தான் அலெக்ஸாண்டர் திரைப்படம். இந்த படத்தில் விஜயகாந்திற்கு ஜோடியாக சங்கீதா நடித்திருப்பார். மேலும் பிரகாஷ்ராஜ், நிழல்கள் ரவி, மற்றும் பல நடிகர்கள் நடிக்க ஆக்ஷன் படமாக வெளிவந்தது.
படத்தை பஞ்சு அருணாச்சலம் தயாரிக்க கார்த்திக் ராஜா இசையில் படம் வெளியானது. அந்த நேரத்தில் விஜயகாந்த் சம்பந்தப்பட்ட படங்கள் என்றால் அவரின் நண்பரான ராவுத்தரின் ஈடுபாடு அதிகளவு இருக்கும். அதனால் விஜயகாந்தின் மார்கெட்டை அறிந்து அதற்கேற்றாற் போல 2 லட்சத்தில் நடிக்க கூடிய வகையில் ஹீரோயின் இருந்தால் போடுங்கள் என்று கூறினாராம்.
மேலும் படம் தீபாவளி ரிலீஸ் என்று தேதி அறிவித்த நிலையில் கிட்டத்தட்ட ஒரு மாதம் இடைவெளி இருந்த நிலையில் படத்திற்கான க்ளைமாக்ஸ் காட்சிகள் மட்டும் படமாக்கப்படாமல் இருந்திருக்கிறது. காரணம் தொடர்ந்து மழை. நாள்கள் நெருங்க நெருங்க மழை விட்டப்பாடில்லை. அதனால் ஒரு யோசனை சொல்லியிருக்கிறார் கேப்டன்.
இதையும் படிங்க : பிடிக்காத படத்தில் நடித்த விஜயகாந்த்!.. சொல்லியும் கேட்காமல் பிடிவாதம் பிடித்த ராவுத்தர்!..
செட்டில் கண்டெய்னரை வைத்து சுற்றி அடித்து விடுங்கள். அதற்கேற்றாற்போல கேமிராவை வைத்து சூட் செய்து விடலாம் என்று சொல்ல அதன் படியே படப்பிடிப்பை நடத்தியிருக்கின்றனர். கிட்ட நெருக்கத்தில் ஒரு நைட்டில் ஆரம்பித்த காட்சி மறு நாள் காலை, நைட் , அதன் பின் காலை என தொடர்ந்து கண்மூடாமல் தொடர்ந்து நடித்தாராம் கேப்டன்.
அப்போது கேரவன் எல்லாம் இல்லை. விஜயகாந்தின் ஒரு சுமோ வேன் இருக்குமாம். அதில் ஏசியை போட்டுவிட்டு மற்ற நடிகர்களை நான்கு மணி நேரம் அந்த வேனில் தூங்க சொல்லுவாராம். ஆனால் இவரும் மற்ற ஸ்டண்ட் ஆர்ட்டிஸ்ட்கள் மட்டும் தூங்காமல் அந்த படத்தின் க்ளைமாக்ஸ் காட்சியில் நடித்துக் கொடுத்திருக்கின்றனர்.
கேப்டனின் கண்கள் சிவந்து போக கொஞ்சம் நேரம் ஓய்வு எடுங்கள் என்று சொன்னாலும் இல்லை
இது க்ளைமாக்ஸ் காட்சிக்கு பொருத்தமாக இருக்கும் என்று சொல்லுவாராம். வேன் பக்கத்தில் கொதிக்க கொதிக்கவெண்ணீர் போட்டு வைப்பார்களாம். சோர்வு ஏற்படாமல் இருக்க அவ்வப்போது அந்த தண்ணீரில் முகம் கழுவிக்கொண்டு வந்து நடிப்பாராம் கேப்டன். இதை பார்த்த இயக்குனர் கே.ஆர். இவர் என்ன மனுஷனா இல்ல பேயா?இப்படி தூங்காமல் நடிக்கிறாரே என்று ஆச்சரியப்பட்டாராம்.