Connect with us

Cinema News

டிராப் ஆன விஜயகாந்த் படம்… இந்த படம் மட்டும் வந்திருந்தா வேற லெவல்…

தமிழ் சினிமாவில் பல திரைப்படங்களில் நடித்தவர் விஜயகாந்த். ரஜினியை விட அவருக்கு அதிக ரசிகர்கள் இருந்த காலம் உண்டு. குறிப்பாக கிராம பகுதிகளில் விஜயகாந்துக்கும் அதிகமான ரசிகர்கள் இருந்தார்கள். அவரின் திரைப்படங்கள் மாபெரும் வெற்றியை பெற்றது. அவர் நடித்த பல திரைப்படங்கள் வெள்ளிவிழா படமாக இருந்தது.

vijayakanth

விஜயகாந்த் நடிப்பில் சில படங்கள் சில நாட்கள் மட்டும் படப்பிடிப்பு முடிந்து டிராப் ஆன கதை உண்டு. அதில் ஒரு திரைப்படம்தான் மனித தர்மம். இப்படத்தை கேப்டன் பிரபாகரன் உட்பட விஜயகாந்தின் பல திரைப்படங்களுக்கு எடிட்டராக பணிபுரிந்த ஜெயச்சந்திரன் இயக்கினார். இப்படத்தை ஆர்த்தில் பிலிம்ஸ் என்கிற நிறுவனம் தயாரித்தது. இப்படத்தின் போஸ்டர்களும் அப்போது வெளியிடபட்டது.

ஆனால், படப்பிடிப்பு 25 சதவீதம் முடிந்த நிலையில் இப்படம் நிறுத்தப்பட்டது. இப்படத்தின் தயாரிப்பாளர் கடன் பிரச்சனையில் சிக்கியதால் இப்படத்தை அவரால் தொடர்ந்து தயாரிக்க முடியவில்லை.

vijayakanth

இந்த படம் நல்ல ஆக்‌ஷன் காட்சிகளை கொண்ட கதையாகும். இப்படம் வெளியாகி இருந்தால் கேப்டன் பிரபாகரனை போல் ஹிட் ஆகியிருக்கும் என திரையுலகினரால் கூறப்பட்டு வருகிறது.

google news
Continue Reading

More in Cinema News

To Top