Connect with us
Vijayakanth

Cinema News

இயக்குனர் செய்த காரியத்தால் ஆயிரம் பேருக்கு முன் அவமானப்பட்ட விஜயகாந்த்…

விஜயகாந்த் ஒரு காலகட்டத்தில் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வந்தவர். ரஜினிகாந்த், கமல்ஹாசன் ஆகிய இரு ஜாம்பவான்களும் ரசிகர்களிடையே மிகப் பிரபலமான நடிகராக உருமாறிக்கொண்டிருந்த காலகட்டத்தில் தனி டிராக் போட்டு தனக்கென ஒரு ரசிகர் கூட்டத்தை உண்டாக்கிக்கொண்டவர் விஜயகாந்த்.

இந்த நிலையில் விஜயகாந்த் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வளர்ந்துவிட்ட காலகட்டத்தில் ஒரு பிரபல தயாரிப்பாளரால் ஒரு சங்கடம் ஏற்பட்டிருக்கிறது. அந்த சம்பவத்தை குறித்து இப்போது பார்க்கலாம்.

கலைப்புலி எஸ்.தாணு

கலைப்புலி எஸ்.தாணு தமிழ் சினிமாவில் ஒரு வெற்றி தயாரிப்பாளராக திகழ்ந்தவர். அவரது விளம்பர யுக்தியை பாராட்டாதவர்களே கிடையாது. அவர் ரஜினியை வைத்து இயக்கிய “கபாலி” திரைப்படத்திற்கு விமானத்தில் விளம்பரம் செய்தார் என்பதை நம்மால் மறந்திருக்கமுடியாது.

அதே போல் ரஜினிகாந்த் முதன்முதலில் கதாநாயகனாக நடித்த “பைரவி” திரைப்படத்திற்கு மிகப் பிரம்மாண்டமான ஒரு பேன்னரை வைத்து விளம்பரம் செய்தார் எஸ்.தாணு. குறிப்பாக முதன்முதலில் ரஜினிகாந்தை சூப்பர் ஸ்டார் என்று குறிப்பிட்டவர் எஸ்.தாணுதான். அதே போல் விஜயகாந்தை வைத்து அவர் தயாரித்த “கூலிக்காரன்” திரைப்படத்தில்தான் விஜயகாந்திற்கு புரட்சித் தலைவர் என்ற பட்டத்தை கொடுத்திருந்தார்.

விஜயகாந்திற்கு ஏற்பட்ட சங்கடம்

இந்த நிலையில் 1990 ஆம் ஆண்டு கலைப்புலி எஸ்.தாணு, விஜயகாந்தை வைத்து தயாரித்து இயக்கிய திரைப்படம் “புதுப்பாடகன்”. இத்திரைப்படத்தை அவர் இயக்கும்போது ஒவ்வொரு காட்சியிலும் எப்படி நடிக்க வேண்டும் என நடிகர்களுக்கு நடித்துக்காட்டுவாராம். அந்த வகையில் அத்திரைப்படத்தின் படப்பிடிப்பு ஒரு நாள் செங்கல்பட்டு பகுதியில் நடைபெற்று வந்தது.

அப்போது படப்பிடிப்பை பார்ப்பதற்கு கிட்டத்தட்ட 1000 பேர்களுக்கு மேல் அங்கே திரண்டிருந்தார்களாம். அப்போது அங்கே படமாக்கப்பட இருந்த ஒரு காட்சியை கலைப்புலி எஸ்.தாணு நடித்துக் காண்பித்தாராம். அதனை பார்த்த நடிகர் ராதாரவி, “தாணு இந்த காட்சியை நடித்து காண்பித்துவிட்டார். அவரின் நடிப்பை இங்குள்ள மக்கள் பார்த்துவிட்டார்கள். விஜயகாந்த் தாணு நடித்துக் காண்பித்தது போல் நிச்சயமாக நடிக்க மாட்டார்” என்று கூறினாராம்.

அவர் கூறியவாறே, விஜயகாந்த், “சார் நீங்க நடிச்சது கொஞ்சம் ஓவர் ஆக்டிங்கா இருக்கு. இது என்னோட பாணியிலே வேற மாதிரி நடிச்சிக்கிறேன்” என கூறிவிட்டு அவருடைய பாணியில் நடித்தாராம். அப்போது அங்கிருந்த ஜனங்கள், “இயக்குனர் நடிச்ச மாதிரி நடி” என்று ஒரே நேரத்தில் கத்தினார்களாம். எனினும் விஜயகாந்த் அதனை எல்லாம் கண்டுகொள்ளாமல் அந்த காட்சியில் நடித்து முடித்துவிட்டார். அதன் பின் கலைப்புலி எஸ்.தாணுவிடம் ராதா ரவி, “இவ்வளவு ஜனங்க மத்தியில் விஜயகாந்திடம் இப்படி நடிச்சிக்காட்டலாமா?” என கேட்டாராம்.

இதையும் படிங்க: இந்த பாட்டு மக்களுக்கு புரியவே கூடாது-பாடலாசிரியருக்கு கண்டிஷன் போட்ட ஏ.ஆர்.ரஹ்மான்…

google news
Continue Reading

More in Cinema News

To Top