ரெய்டில் சிக்கிய கேப்டன்...! அதிகாரிகளிடம் மாஸ் காட்டி பிரமிப்பில் ஆழ்த்திய சம்பவம்...

by Rohini |   ( Updated:2022-07-12 08:11:12  )
vijay_main_cine
X

தமிழ் சினிமாவின் முன்னனி நாயகனாக வலம் வந்தவர் நடிகர் விஜயகாந்த். இவருடயை சாதனையை இன்று வரை
யாராலும் முறியடிக்க முடியாது. இவருக்கு இன்று வரை ஏகப்பட்ட ரசிகர்கள் இருந்து கொண்டே இருக்கிறார்கள். அந்த அளவிற்கு அன்பையும் பாசத்தையும் உதவியையும் வாரி வாரி இறைத்தவர் நம்ம கேப்டன்.

vijay1_cine

விஜயகாந்தின் ஒரு சாதனை இன்று பல நடிகர்களால் கூட முறியடிக்கப்படாமல் இருந்து வருகிறது. ஒரே வருடத்தில் 18 படங்களை நடித்தார். 1984ம் ஆண்டு சராசரியாக 20 நாளைக்கு ஒரு படம் நடித்து இருந்தார். இவரது 100 வது படமான கேப்டன் பிரபாகரன் படம் சினிமாவில் ஒரு மைல் கல்லாக அமைந்தது.

vijay2_cine

இவரது சண்டை காட்சிகள் திரையரங்கையே அதிரவைக்கும். மேலும் நடிப்பிலும் பட்டையை கிளப்புவார். இந்த நிலையில் இவரது வீட்டிற்கு ஒரு சமயம் வருமான வரித்துறையில் இருந்து அதிகாரிகள் ரெய்டு நடத்தினார்களாம்.

vijay3_cine

காலையில் ஆரம்பித்த ரெய்டு மாலை வரை தொடர்ந்து கொண்டே இருந்ததாம். ஒரு வழியாக ரெய்டை முடித்த அதிகாரிகளில் ஒருவர் விஜயகாந்திடம் வந்து உங்கள் ஆவணங்களை எல்லாம் பார்த்தோம். எந்த அளவுக்கு நல்லது பண்ண வேண்டுமோ பண்ணிக் கொண்டு இருக்கிறீர்கள் என இதை பார்க்கும் போது தான் தெரிகிறது. நாங்கள் இந்த ரெய்டு நடத்தியதை எண்ணி வருத்தம் கொள்ளாமல் மேலும் மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என வாழ்த்துகிறேன் என கூறி சென்றாராம்.

Next Story