Categories: Cinema News latest news

வேணும்னு கூட்டிட்டு வந்து இப்படியா அடிக்கிறது! விஜயகாந்த் விட்ட அறையால் சுருண்டு விழுந்த ராதிகா

தமிழ் சினிமாவில் மிகவும் பரபரப்பாக பேசப்பட்ட ஜோடி என்றால் அந்த காலத்தில் விஜயகாந்தும் ராதிகாவும்தான். இருவரும் ஒருவரையொருவர் காதலித்து வந்த நிலையில் சில பல பிரச்சினைகள் காரணமாக பிரிந்தனர் என்ற செய்திகள் இன்று வரை ஊடகங்களில் வெளியாகிக் கொண்டிருக்கின்றது.

விஜயகாந்தை ஒரு நாகரீக காலத்திற்கு ஏற்ப மாற்றிய பெருமை ராதிகாவையே சேரும். இருவரும் சேர்ந்து பல படங்களில் ஒன்றாக நடித்திருக்கின்றனர். அந்தப் படங்களும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றன. இருவரின் கெமிஸ்ட்ரி படத்தில் ரியல் தம்பதிகளாகவே காட்டியது.

இதையும் படிங்க : வெறும் காபி.. 100 ரூபாயை மட்டும் கொடுத்து 7 பாட்டை வாங்கிய இயக்குனர்… பிரசாந்த் படத்தின் சுவாரஸ்ய பின்னணி!

அந்தளவுக்கு இருவரும் அந்யோன்யமாக பழகி வந்தார்களாம். இந்த நிலையில் பூந்தோட்டகாவல்காரன் படத்தில் விஜயகாந்துக்கு ஜோடியாக முதலில் ஜெயசுதாவைத்தான் அணுகியிருக்கிறார்கள். ஆனால் அந்த கதாபாத்திரத்திற்கு ராதிகாதான் சரியாக இருப்பார் என விஜயகாந்த் சொல்லியிருக்கிறார்.

ஆனால் ராதிகா அந்த நேரத்தில் பிஸியான நடிகையாக வலம் வந்து கொண்டிருந்ததனால் இந்தப் படத்திற்கான கால்ஷீட்டை ஒதுக்கி நடிக்க ஒத்துக்கொண்டாராம். மேலும் படத்தின் க்ளைமாக்ஸ் காட்சியில் ராதிகாவை விஜயகாந்த் அடிக்கிற மாதிரி இருக்கும். அப்பொழுது விஜயகாந்த் அடிக்கும் போது டைமிங் மிஸ் ஆகி ராதிகாவின் காதோரம் அந்த அறை விழுந்ததாம்.

இதையும் படிங்க : தவறாக வழிநடத்தப்படுகிறாரா அஜித்? அடுத்தடுத்து கேள்விக்குறியாகும் இயக்குநர்களின் வாழ்க்கை..

ஏற்கெனவே கட்டுமஸ்தான உடல்வாகுவை கொண்டவர் விஜயகாந்த். இப்படி அறைந்தது ராதிகாவின் காதில் பட்டு காதே கேட்கவே இல்லையாம். அப்படியே உட்கார்ந்து விட்டாராம் ராதிகா. மேலும் கொஞ்ச நேரம் தனியா விடுங்கள் என சொல்லி நிலைமையை சமாளித்திருக்கிறார் ராதிகா. இந்த தகவலை பூந்தோட்ட காவல்காரன் படத்தின் இயக்குனர் செந்தில்நாதன் கூறினார்.

Published by
Rohini