“சின்ன கேரக்டர்தான் எனக்காக பண்ணுங்க”… வேண்டுகோள் விடுத்த விஜயகாந்த்… கண்ணீரில் தத்தளித்த ஜூனியர் நடிகர்…

Published on: November 15, 2022
Vijayakanth
---Advertisement---

தமிழ் சினிமாவின் கேப்டன் என்று செல்லமாக அழைக்கப்படும் விஜயகாந்தின் பெருந்தன்மை குறித்து பலரும் அறிந்திருப்பார்கள். உதவி என்று யார் வந்து நின்றாலும் அவருக்கு தேவையானதை செய்துகொடுத்துவிட்டு மனநிறைவோடுதான் வந்தவரை திருப்பி அனுப்புவார்.

Vijayakanth
Vijayakanth

அது மட்டுமல்லாது பசியோடு வருபவர்களை சாப்பிட வைத்துவிட்டுத்தான் மறுவேலை பார்ப்பார். அதே போல் தனது சக நடிகர்களை மதிப்பதிலும் சிறந்து விளங்கியவர். இந்த நிலையில் ஒரு ஜூனியர் நடிகரிடம் விஜயகாந்த் பெருந்தன்மையாக நடந்துகொண்ட நெகிழ்ச்சி சம்பவம் குறித்து இப்போது பார்க்கலாம்.

2004 ஆம் ஆண்டு விஜயகாந்த், மஹிமா, நாசர் ஆகியோரின் நடிப்பில் சமுத்திரக்கனி இயக்கத்தில் வெளிவந்த திரைப்படம் “நெறஞ்ச மனசு”. நடிகர் சம்பத் தமிழில் அறிமுகமான முதல் திரைப்படம் இதுதான். இதில் சிவணான்டி என்ற முக்கிய கதாப்பாத்திரத்தில் சம்பத் நடித்திருந்தார். எனினும் இத்திரைப்படத்திற்கு ரசிகர்களிடையே ஆதரவு இல்லாமல் போனது.

Sampath Raj
Sampath Raj

இதனை தொடர்ந்து 2006 ஆம் ஆண்டு விஜயகாந்த் நடிப்பில் வெளிவந்த “பேரரசு” திரைப்படத்தின் உருவாக்கத்தின் போது இயக்குனரை அழைத்து “சம்பத்தை ஒரு கதாப்பாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்யுங்கள். எனது முந்தைய திரைப்படத்தில் அவர் நன்றாக நடித்திருந்தார். ஆனால் அந்த படம் தோல்வியடைந்ததால் அவருக்கு சரியான அங்கீகாரம் கிடைக்கவில்லை. ஆதலால் இந்த படத்தில் சம்பத்தை நடிக்க வைத்தால் அவருக்கு ஓரளவு அங்கீகாரம் கிடைக்கும்” என கூறினாராம்.

இதையும் படிங்க: “கருப்பா துருதுருன்னு ஒரு ஆள்”… சல்லடை போட்டு தேடிய பாலச்சந்தரின் உதவியாளர்… வந்தது யாரு? சூப்பர் ஸ்டாரு…

Vijayakanth
Vijayakanth

அதன் பின் படப்பிடிப்பின்போது விஜயகாந்த் சம்பத்தை அழைத்து “இந்த படத்தில் உங்களுக்கு ஒரு ரோல் கொடுக்க சொல்லியிருக்கிறேன். நாம் இருவரும் சேர்ந்து நடித்த முந்தைய திரைப்படம் சரியாக ஓடவில்லை. ஆனால் இது கொஞ்சம் சின்ன ரோல்தான். எனக்காக கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணி நடிங்க” என கூறினாராம்.

Sampath
Sampath

அதாவது விஜயகாந்த், சம்பத்திற்கு வாய்ப்பையும் வாங்கிக்கொடுத்து, அவரிடம் “சின்ன ரோல்தான். எனக்காக அட்ஜெஸ்ட் செஞ்சுக்கோங்க” எனவும் கூறியிருக்கிறார். விஜயகாந்த்தின் இந்த பெருந்தன்மையை குறித்து ஒரு பேட்டியில் சம்பத் பேசும்போது கிட்டத்தட்ட அழுதேவிட்டாராம்.

Arun Prasad

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.