சம்பளத்தை குறைக்க முடியுமா? விஜயகாந்தின் தடாலடி முடிவால் அதிர்ந்த தயாரிப்பாளர்..

Vijayakanth
தமிழ் சினிமாவின் தயாரிப்பாளர்களுக்கு ஆஸ்தான நடிகர் என்றால் அது விஜயகாந்த் தான். யாருடமும் பெரிதாக கறார் காட்டாமல் இருப்பவர். அது கால்ஷூட் மட்டுமல்ல சம்பள விஷயத்திலும் தயாரிப்பாளர் கொடுப்பதை மட்டுமே வாங்கி கொள்வார் என்ற தகவல் வெளியாகி இருக்கிறது.
பல தயாரிப்பாளர்கள் படம் நஷ்டமாகி விட்டது. கடன் இருக்கு என சொன்னால் அவர்களிடம் சம்பளமே கேட்க மாட்டாராம். இதை பலரும் பல பேட்டிகளில் தெரிவித்து உள்ளனர். இதே போன்ற ஒரு அனுபவம் தயாரிப்பாளரும், நடிகருமான சித்ரா லட்சுமணனுக்கு ஏற்பட்டுள்ளதாம்.

chitra lakshman
மண்வாசனை படம் மூலம் தயாரிப்பாளராக அறிமுகமாகியவர் சித்ரா லட்சுமணன். இவர் விஜயகாந்தினை முதன்முதலாக தயாரித்த படம் தான் புதிய தீர்ப்பு. சி.வி.ராஜேந்திரன் இயக்கத்தில் உருவாகி இருந்த இப்படத்திற்கு விஜயகாந்த் 2.5 லட்ச ரூபாய் சம்பளமாக கேட்டு இருந்தாராம். ஆனால் அட்வான்ஸ் தொகையாக வெறும் 5000 மட்டுமே வாங்கி கொண்டாராம்.
அம்பிகாவை நாயகியாக போட்டு படப்பிடிப்பும் தொடங்கியது. விறுவிறுப்பாக பாதி படப்பிடிப்பு முடிந்த நிலையில், இப்படம் தோல்வியை தான் தழுவும் என சித்ரா லட்சுமணன் எண்ணி இருக்கிறார். இதனால் விஜயகாந்தின் சம்பளத்தை இப்போதே கொடுத்து விடலாம் என அவரை காண சென்றாராம்.

puthiya theerpu
அவரிடம் சம்பளத்தில் எதுவும் குறைத்து கொள்ள முடியுமா? எனக் கேட்டு இருக்கிறார். ஆனால், அவர் முடியாது என்றால் கையில் இருக்கும் மொத்த காசை கொடுத்து விடலாம் என வைத்திருந்தாராம் சித்ரா லட்சுமணன். ஆனால் விஜயகாந்த் 50000 குறைத்து கொள்ளுங்கள் என உடனே சொல்லி விட்டார். இதை கேட்ட சித்ரா லட்சுமணனுக்கு ஆச்சரிய அதிர்ச்சியாக தான் இருந்ததாம்.