
Flashback
நீதான் ஹீரோனு விஜயகாந்தை கூட்டிட்டு போனா? அங்கு காத்திருந்த அதிர்ச்சி.. இப்படி ஒரு ஏமாற்றமா?
ஒரு லட்சியத்தை அடைய வேண்டுமென்றால் அவ்வளவு எளிதாக முடியாது. இடையில் எத்தனையோ தடங்கள், மேடு பள்ளங்கள் ,கஷ்டங்கள், சோகங்கள் என எல்லாவற்றையும் கடந்துதான் நாம் நினைத்த இடத்தை அடைய முடியும். இது எல்லா துறைகளுக்கும் பொருந்தும். அதில் சினிமா என்பது பலருக்கும் ஒரு கனவாக இருக்கிறது. எப்படியாவது சினிமாவில் நுழைந்து ஹீரோவாக ஆக வேண்டும் என எத்தனையோ பேர் இந்த கோடம்பாக்கத்தை நோக்கி பயணம் செய்திருக்கின்றனர்.
அதில் சில பேர் ஜெயித்திருக்கின்றனர். சில பேர் வேண்டவே வேண்டாம் என பயந்து ஓடியும் இருக்கின்றனர். அப்படி இன்று தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களாக இருக்கும் பல பேர் ஏகப்பட்ட போராட்டங்களை கடந்து தான் இன்று அவர்களுடைய இடத்தை தக்கவைத்து இருக்கின்றனர். அதில் விஜயகாந்த் மட்டும் விதிவிலக்கா என்ன. ஆரம்பத்தில் அவர் போராடிய போராட்டம், பட்ட கஷ்டம் என அனைவருக்கும் தெரியும். ஏழ்மையான குடும்பம் என்று சொல்லிவிட முடியாது.
ஆனால் சினிமாவில் ஒரு வாய்ப்பை தேடுவதற்கு அவர் நிறைய கஷ்டங்களை பட்டிருக்கிறார் .ஏன் ரஜினிக்கு அவர் காவலாளியாக இருந்திருக்கிறார் .அதே ரஜினிக்கு போட்டியாகவும் ஒரு காலத்தில் மாறினார். ஆரம்பத்தில் சின்ன சின்ன கதாபாத்திரங்களில் நடித்து அதன் பிறகு ஹீரோவாக மாறினார் விஜயகாந்த். அவருடைய கேரியரில் மிக முக்கிய பங்கு வகிப்பவர் விஜயின் அப்பா எஸ் ஏ சந்திரசேகர்.
விஜயகாந்தை வைத்து தொடர்ந்து 18 படங்களை இயக்கி சினிமாவில் ஒரு தவிர்க்க முடியாத நடிகராக மாற்றியவரே எஸ் ஏ சந்திரசேகர் தான். ஆரம்பத்தில் படங்களில் நடிப்பதற்கு முன் வாய்ப்புகளை தேடிக்கொண்டிருந்த விஜயக்காந்தை இந்த படத்தில் நீ தான் ஹீரோ என பாக்கியராஜ் அழைத்துக்கொண்டு போய் நிற்க ஆனால் அவருக்கு முன் வேறொரு நடிகரை ஒப்பந்தம் செய்து இருக்கிறார் அந்த படத்தின் இயக்குனர்.
இதைப் பற்றி பாக்யராஜ் ஒரு பேட்டியில் கூறும்பொழுது 1979 ஆம் ஆண்டு வெளிவந்த கன்னிப்பருவத்திலே திரைப்படம் .அந்த படத்தை இயக்கியவர் பிஏ பாலகுரு .அதில் பாக்யராஜும் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். இந்த படத்திற்கு நீதான் ஹீரோ என விஜயகாந்தை அழைத்துக் கொண்டு போய் படத்தின் தயாரிப்பாளரான ராஜ் கண்ணுவிடம் நிறுத்தி இருக்கிறார்.

kanni
ஆனால் ராஜ் கண்ணு என்னப்பா இவ்வளவு தாமதமா வந்துட்ட .இந்த படத்துக்கு வேறொரு நடிகரை இயக்குனர் ஒப்பந்தம் செய்து விட்டார் எனக் கூறி விஜயகாந்துக்கு அதிர்ச்சியை கொடுத்திருக்கிறார். அந்த நடிகர் வேறு யாருமில்லை நடிகர் ராஜேஷ். இதைக் கேட்டதும் பாக்யராஜுக்கும் அதிர்ச்சி .ஏனெனில் வாய்ப்புக்காக தேடிக் கொண்டிருந்த விஜயகாந்த் இப்படி வந்த வாய்ப்பும் போய்விட்டதே என விஜயகாந்தை விட பாக்கியராஜ் தான் மிகவும் வருத்தப்பட்டாராம். இருந்தாலும் விஜயகாந்த் பரவாயில்லை எனக்காக நீங்கள் இந்த அளவு மெனக்கெட்டிருக்கிறீர்கள். அதற்காக நன்றி என சொன்னாராம். அதன் பிறகு தான் தூரத்து இடி முழக்கம் படத்தில் நடிக்கக்கூடிய வாய்ப்பு விஜயகாந்தை தேடிவந்தது என பாக்கியராஜ் அந்த பேட்டியில் கூறினார்.