18 படங்கள் நடிச்சும் வாய்ப்பில்லாமல் தவித்த விஜயகாந்த்!.. மார்க்கெட்டை தூக்கி நிறுத்திய அந்த திரைப்படம்...

Vijayakanth: சினிமாவில் ஒரு நடிகரின் மார்க்கெட் என்பது வெற்றி, தோல்விகளை பொறுத்து மாறி மாறி அமையும். 3 தொடர் வெற்றியை ஒரு நடிக கொடுத்துவிட்டால் போதும். அதை வைத்து 10 வருடங்களை கூட அந்த நடிகரால் ஓட்டமுடியும். தயாரிப்பாளர்கள் அவர்களை நம்பி வருவார்கள். அடுத்த 2 படங்கள் தோற்றாலும் கூட அவருக்கு வாய்ப்புகள் வரும்.
சம்பளத்தை கொஞ்சம் குறைத்து கொடுப்பார்களே தவிர வாய்ப்புகள் நின்று போகாது. தனுஷெல்லாம் அப்படித்தான். துள்ளுவதோ இளமை, காதல் கொண்டேன், திருடா திருடி என தொடர்ந்து 3 ஹிட் படங்களை கொடுத்தார். அவரின் வீட்டு வாசலில் தயாரிப்பாளர்கள் நின்றார்கள். அதுதான் இப்போது தனுஷை பெரிய நடிகராக்கியுள்ளது.
இதையும் படிங்க: ஒதுக்கிய பாலச்சந்தருக்கும் உதவிய விஜயகாந்த்.. என்ன மனுஷம்பா இவரு!..
விக்ரம் கூட அப்படித்தான். சேது, தில், தூள் என 3 படங்களை கொடுத்தார். சாமி எனும் சூப்பர் ஹிட் படத்தை கொடுத்தார். அந்த படத்திற்கு பின் அவ்வளவு பெரிய வெற்றியை விக்ரம் இதுவரை கொடுக்கவில்லை. ஆனாலும் அவரின் வண்டி ஓடிக்கொண்டுதான் இருக்கிறது. 20 வருடங்களுக்கு முன்பு அஜித் நிறைய தோல்விப்படங்களை கொடுத்த ஒரு நடிகர்தான். வாலி படம்தான் அவரை மீண்டும் தூக்கிவிட்டது.
இப்படி எல்லா நடிகர்களுக்கும் ஒரு கதை இருக்கும். இது விஜயகாந்துக்கும் இருக்கிறது. சினிமாவில் போராடி இனிக்கும் இளமை என்கிற படத்தில் அறிமுகமானார் விஜயகாந்த். அந்த படம் ஓடவிலை. அதன்பின்னர் சில படங்களில் நடித்தார். எதுவும் ஓடவில்லை. அப்போதுதான் எஸ்.ஏ.சந்திரசேகரின் அறிமுகம் கிடைத்து அவர் இயக்கிய ‘சட்டம் ஒரு இருட்டறை’ படத்தில் நடித்தார். அப்படம் சூப்பர் ஹிட்.
இதையும் படிங்க: நான் அப்படி நடிப்பேன்னு யாரும் நம்பல!.. ஒருத்தர தவிர!.. விஜயகாந்த் சொன்னது யாரை தெரியுமா?…
அதன்பின் கிட்டத்தட்ட 15 படங்களில் விஜயகாந்த் நடித்தார். எதுவுமே ஓடவில்லை. சரி வாய்ப்பு வந்தால் நடிப்போம் என விஜயகாந்தும் எந்த முயற்சியும் செய்யவில்லை. அப்போதுதான் மீண்டும் எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கத்தில் ‘சாட்சி’ எனும் படத்தில் நடித்தார். இந்த படம் ஹிட் அடிக்க அவருக்கு தொடர் வாய்ப்புகள் வந்தது.
அதன்பின் அவர் நடித்து வெளியான வைதேகி காத்திருந்தாள் திரைப்படம் ஒரு வெள்ளி விழா படமாக அமைந்து விஜயகாந்தின் மார்க்கெட்டை எங்கேயோ கொண்டு சென்றுவிட்டது. அதன்பின் பல ஹிட் படங்களில் நடித்து பெரிய ஹீரோவாகவும் விஜயகாந்த் மாறினார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: எம்.ஜி.ஆர் பலமுறை ரசித்து பார்த்த விஜயகாந்த் படம்!.. அதுக்கு ஒரு காரணம் இருக்கு!…