More
Categories: Cinema History Cinema News latest news

பிரச்சார வண்டி மட்டுமில்ல.. கேப்டன்கிட்ட கொடுக்கப்பட்ட எம்ஜிஆரின் மற்றொரு பொக்கிஷம்

எம்ஜிஆருக்கு அடுத்தபடியாக அவரை கொண்டாடிய அளவுக்கு மக்களால் அதிகம் கொண்டாடப்பட்ட நடிகராக தமிழ் சினிமாவில் இருந்தவர் நம் கேப்டன் புரட்சி கலைஞர் விஜயகாந்த். தமிழ் சினிமாவில் கிட்டத்தட்ட 150 படங்களுக்கு மேல் நடித்து சினிமாவில் ஒரு மிகப்பெரிய ஆளுமையாக திகழ்ந்து வந்தார். யாருக்கு எந்த நேரத்தில் என்ன உதவி வேண்டுமானாலும் முதல் ஆளாக சென்று தன்னுடைய உதவிகரத்தை நீட்டுபவர் விஜயகாந்த்.

தயாரிப்பாளருக்கான நடிகர் என்றே அவரை சொல்லலாம். அந்த அளவுக்கு தயாரிப்பாளருக்கு எந்த ஒரு நஷ்டத்தையும் கொடுக்கக் கூடாது என்பதில் மிகவும் கவனமாக இருப்பவர். எந்தவித செலவையும் பெரிதளவு எடுத்து வைக்கக் கூடாது என்றும் நினைப்பவர். அவருடைய அலுவலகத்திற்கோ வீட்டிற்கோ எப்பொழுது போனாலும் வயிறார சாப்பிட்டு வர முடியும். அப்படி தன்னை தேடி வருபவர்களை மனதார  வயிறார முழுவதுமாக நிறைவுடன் அனுப்பி வைப்பதே அவருடைய மரபாக இருந்தது.

Advertising
Advertising

இதையும் படிங்க: ‘சப்புனு அறைவேன்’.. வெளியான புஷ்பா 2 பாடல்! ஆத்தாடி இது பயங்கரமால இருக்கு

இதனாலேயே மக்கள் அவரை நேசித்தார்கள். ஆனால் சினிமா வேறு அரசியல் வேறு என கூடிய சீக்கிரம் மக்களும் அவருக்கு புரிய வைத்தனர். இந்த அளவு ரசிகர்கள் நம்மை அதிகம் நேசிக்கிறார்கள் என்பதை நினைத்து அவர்களை நம்பி அரசியலுக்குள் வந்தார் விஜயகாந்த். ஆனால் அரசியலுக்குள் வந்து எதிர்க்கட்சித் தலைவராக மாறினார். அவ்வளவுதான். அதன் பிறகு இந்த நாட்டை ஆளும் தகுதியை மக்கள் அவருக்கு கொடுக்கவில்லை.

janaki

அதற்கு அவருடைய உடல் நிலையும் ஒரு காரணமாக இருந்தது. அதுதான் அவருடைய அரசியல் பின்னடைவுக்கும் காரணமாக அமைந்தது. அவர் அரசியல் பிரச்சார கூட்டங்களுக்கு செல்லும்போது எல்லாம் ஒரு விஷயத்தை மறக்காமல் கூறுவார் .அது எம்ஜிஆர் பிரச்சாரத்திற்காக பயன்படுத்திய அந்த வண்டி என்னிடம் இருக்கிறது. அதை எம்ஜிஆர் ஞாபகமாக ஜானகி அம்மையார் என்னிடம் கொடுத்தார் என்பதை அடிக்கடி கூறுவார் .

இதையும் படிங்க: வடிவேலுவை நம்பி ஏமாந்துட்டேன்.. கடைசில குப்பையாதான் கொடுத்தாங்க! புலம்பும் தயாரிப்பாளர்

ஆனால் அந்த பிரச்சார வண்டியைத் தவிர வேறு ஒரு பொருளும் எம்ஜிஆர் ஞாபகமாக விஜயகாந்த்திடம் இருந்ததாக பிரேமலதா சமீபத்தில் கூறியிருக்கிறார். அது வேறு ஒன்றும் இல்லை .ஒரு படத்தில் எம்ஜிஆர் அணிந்திருந்த கோட் மற்றும் அவர் பயன்படுத்திய டைகள் என எம்.ஜி.ஆர் ஞாபகமாக ஜானகி அம்மையார் விஜயகாந்திடம் கொடுத்தாராம். இதை ஒரு விழா மேடையில் பிரேமலதா கூறியது இப்போது வைரலாகி வருகின்றது .அது மட்டுமல்ல அந்த கோட்டை காண்பித்து ரசிகர்களாகிய உங்களிடம் நான் ஒரு வேண்டுகோளை வைக்கிறேன். இந்த கோட் எம்ஜிஆர் எந்தப் படத்தில் பயன்படுத்தினார் என்பதை எனக்கு கூறுங்கள் என கேட்டிருக்கிறார்.

Published by
Rohini