Connect with us
viji

Cinema News

ரஜினி, கமலை இந்நேரம் பந்தாடியிருப்பாரு! குடியையும் தாண்டி கேப்டன் வாழ்க்கையை சீரழித்த அந்த விஷயம்

தமிழ் சினிமாவில் இன்று வரை அனைவருக்கும் பிடித்தமான நடிகராக வலம் வருபவர் நடிகர் விஜயகாந்த். இன்று தன்னுடைய 71 வது பிறந்தநாளை விஜயகாந்த் கொண்டாடி வருகின்றார். அவருடைய பிறந்த நாளை தனது தொண்டர்கள் முன்னிலையில் விஜயகாந்த் கொண்டாடி வருகிறார்.

அதுமட்டுமில்லாமல் மாவட்ட வாரியாகவும் கேப்டன் பிறந்த நாளை இனிப்புகள் வழங்கியும் கோலாகலமாக கொண்டாடி வருகிறார்கள். அவரது பிறந்த நாளை வறுமை ஒழிப்பு தினமாகவும் அனுசரிக்கப்படுகிறது.

இதையும் படிங்க : தப்பிச்சு எப்படியாவது ஓடிவிடு! ஜெய்லர் சக்சஸ் பார்ட்டியில் நெல்சனை கடுப்பாக்கிய ரஜினி!

நீண்ட நாள் கழித்து தனது கேப்டனை பார்த்த தொண்டர்கள் மகிழ்ச்சியில் கேப்டன் , கேப்டன், கேப்டன் வாழ்க என முழக்கமிட்டனர். மதுரையில் கள்ளழகரை பார்க்க எப்படி திரளான பக்தர்கள் கூடுவார்களோ அதே போல் அவரது அலுவலகத்திற்கு ஏராளமான தொண்டர்கள் விஜயகாந்துக்கு வாழ்த்துக்களை தெரிவிக்க வந்தனர்.

இந்த நிலையில் பிரபல தயாரிப்பாளரான டி.சிவா விஜயகாந்தை பற்றி அவரது அனுபவத்தை இன்று ஒரு பேட்டியில் கூறினார். விஜயகாந்தின் உடல் நிலைக்கு காரணம் குடிப்பழக்கம் என்று சொல்கிறார்களே அது உண்மையா என நிரூபர் கேட்டார்.

அதற்கு டி.சிவா யாருதான் குடிக்காமல் இருக்கிறார்கள், இவரை விட நல்லா குடித்தவர்கள் எல்லாம் நன்றாகத்தான் இருக்கிறார்கள். ஆகவே குடி மட்டும்தான் காரணம் என்று சொல்லிவிட முடியாது. 30 வயசில் சாகுறவனும் இருக்கான், 90 வயசில் நல்லா வாழுறவனும் இருக்கான்.

இதையும் படிங்க : வெறித்தனமான லுக்கில் விஜயகாந்த் மகன்!.. தெறிக்கவிடும் டைட்டில் கிளிம்ப்ஸ் வீடியோ..

ஆகவே விஜயகாந்துக்கு இப்படி ஆனதுக்கு காரணம் அந்த அரசியல்தான். அரசியலில் நுழைந்த பிறகுதான் தேவையில்லாத அலைச்சல், டென்சன், என தன் உடம்பை கெடுத்துக் கொண்டார் விஜயகாந்த். இல்லையென்றால் இன்று ரஜினிக்கு எப்படி ஒரு ஜெய்லர் வந்ததோ அதே போல் விஜயகாந்துக்கும் ஒரு ஜெய்லர் வந்திருக்கும். அரசியலை விட்டிருந்தால் சினிமாவில் இன்று அவர்தான் டாப்.

அப்பவே வயதான தோற்றத்தில் நடித்தவர். இப்ப நடிக்க மாட்டாரா? இன்னும் சொல்லப்போனால் ஊடகங்கள் எப்பொழுது இவரின் இந்த நிலைமைக்கு காரணம் குடிதான் என்று எழுதினார்களோ அப்பொழுதே அவர் குடியை நிறுத்தி விட்டார். கிட்டத்தட்ட 2009 ஆம் ஆண்டிற்கு பிறகே அவர் குடிப்பதில்லை.

ஆகவே இந்த நிலைமைக்கு காரணம் அரசியல் தான் . இனிமேலும் அவர் குடியால் தான் கெட்டார் என ஊடகங்கள் எழுத வேண்டாம் என டி.சிவா அந்த பேட்டியில் கூறினார்.

google news
Continue Reading

More in Cinema News

To Top