Connect with us
kanth

Cinema News

நீ எதுக்கு பைக்ல வரேனு 3 காரை அனுப்புனாரு – கேப்டன் குறித்து கண்ணீர் மல்க கூறிய இயக்குனர்

Captain Vijayakanth: விஜயகாந்தின் மறைவு  ஒட்டுமொத்த தமிழக மக்களையும் துயரத்தில் ஆழ்த்தியிருக்கிறது. நேற்று சுவாசக் கோளாறில் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட விஜயகாந்துக்கு கொரானா தொற்று இருப்பதாகவும் கூறப்பட்டது.

அதன் பின் வெண்டிலேட்டர் கொடுக்கப்பட்டதாகவும் கூறினார்கள். ஆனால் சிகிச்சை பலனின்றி விஜயகாந்த் காலமானார்.  இப்போது அவரது உடல் கோயம்பேட்டில் இருக்கும் அவரது திருமண மண்டபத்தில் வைக்கப்பட்டிருக்கிறது.

இதையும் படிங்க: 112 டூ 315.. அசைக்க முடியாத சாதனைகளை செய்த மக்கள் இமயம்.. விஜயகாந்தின் சூப்பர்டூப்பர் ஹிட் படங்கள் இத்தனையா?

நாளை விஜயகாந்தின் இறுதிச் சடங்கு நடத்தப்பட உள்ளது. இந்த நிலையில் ஒரு சில பிரபலங்கள் அவருக்கு அஞ்சலி செலுத்திவிட்டு செல்கின்றனர். கவுண்டமணி, பிரபு, விக்ரம் பிரபு போன்றோர் நேரடியாக வந்து விஜயகாந்த் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார்கள்.

ரஜினி நாகர்கோயிலில் இருந்து சென்னை புறப்பட்டார் என்றும் சொல்லப்படுகிறது. விஜயகாந்தின் பல புரட்சிக்கரமான படத்துக்கு சொந்தக்காரராக இருக்கும் எஸ்.ஏ. சந்திரசேகர் துபாயில் இருக்கிறார். அவரால்  வரமுடியாத சூழ்நிலை.

இதையும் படிங்க: அந்த வானத்தைப் போல மனம் படைச்ச மன்னவனே!.. நடிகர்கள் – இயக்குனர்கள் நெகிழ்ச்சி

இந்த நிலையில் விஜயகாந்த் நடித்த தென்னவன் படத்தை இயக்கியவர் நந்தகுமரன். அவரும் நேரடியாக வந்து அஞ்சலி செலுத்தினார். அப்போது அவர் பேட்டியாளர்களிடம் ‘விஜயகாந்த் அனைவரிடமும் சகஜமாக பழகக்கூடியவர். அவரை பார்க்க ஒரு சமயம் அவரது அலுவலகத்திற்கு பைக்கில் சென்றேன்’.

ஒரு படவிஷயமாக சென்ற போது பைக்கில் சென்றேன். விஜயகாந்த் என்னை பார்த்ததும் எதில் வந்தீர்கள் என கேட்டார். அதற்கு பைக்கில்தான் வந்தேன் என்று கூறினேன்  .உடனே அங்கு இருந்த மேனேஜர் மற்றும் உதவியாளர்களை அழைத்து விஜயகாந்த் திட்டினார். அடுத்த நாளில் இருந்து என் வீட்டில் 3 கார்கள் வரிசை கட்டி நின்றன என நந்தகுமரன் கூறினார்.

இதையும் படிங்க: ரஜினிக்கே டஃப் கொடுத்த நடிகர்!. அதிக நாட்கள் ஓடி சாதனை படைத்த விஜயகாந்த் படங்கள்!.

google news
Continue Reading

More in Cinema News

To Top