சின்ன வயசிலேயே உதவி செய்து அப்பாவிடம் அடி வாங்கிய விஜயகாந்த்.. அப்போது அவர் எடுத்த தீர்க்கமான முடிவு!..

விஜயகாந்த் என்றாலே எல்லோருக்கும் நினைவுக்கு வருவது அவரின் மனிதாபிமானமும், பிறருக்கு உதவும் குணமும்தான். தனக்கு தெரிந்த யாருக்கேனும் பிரச்சனை முதல் ஆளாக போய் நிற்பார். படப்பிடிப்பு தளத்தில் பல வேறுபாடுகளை தயாரிப்பாளர்கள் வைத்திருந்தபோது எல்லோரும் சமம் என சொல்லி எல்லோருக்கும் ஒரே உணவை போட்டவர். அதற்கு சில தயாரிப்பாளர்கள் தயங்கியபோது அதற்கான செலவை என் சம்பளத்தில் பிடித்துக்கொள்ளுங்கள் என்று சொன்னவர் விஜயகாந்த்.

அவர் அதை செய்த பின்னர்தான் பல சினிமா நிறுவனங்கள் ஹீரோ முதல் கடைசி ஊழியர் வரை எல்லோருக்கும் ஒரே உணவை போட்டனர். மனதிற்குள் எந்த சூதும், வஞ்சமும், பழி வாங்கும் உணர்வும் இல்லாமல் சினிமாவில் இருந்த மிக சொற்பமான நடிகர்களில் விஜயகாந்த் முக்கியமானவர்.

இதையும் படிங்க: வெறித்தனமான லுக்கில் விஜயகாந்த் மகன்!.. தெறிக்கவிடும் டைட்டில் கிளிம்ப்ஸ் வீடியோ..

அதனால்தான் இப்போது அவரை பற்றி திரையுலகினர் பலரும் பெருமையாக பேசுகின்றனர். அவரின் அலுவலகம் சென்றால் மதிய உணவு நிச்சயம். அவரின் சாப்பாடுதான் சினிமாவில் சரியான வருமானம் மற்றும் வாய்ப்பு இல்லாமல் இருந்த பல கலைஞர்களின் பசியை போக்கியது.

சினிமாவில் ஹீரோ ஆகி லட்சம் லட்சமாய் சம்பாதித்த பின்னர்தான் விஜயகாந்த் எல்லோருக்கும் உதவியிருப்பார் என நினைத்தால் அதில் உண்மையில்லை. அவர் சிறுவனாக இருக்கும்போதே அப்படித்தானாம். அவருக்கு பதினாறு வயது இருக்கும்போது அவரின் அப்பா அவரின் கழுத்தில் ஒரு தங்க செயினை அணிவித்திருந்தாராம்.

அப்போது விஜயகாந்த் விஜயராஜாவாக இருந்தார். தனக்கு தெரிந்த ஒரு ஏழையின் மகன் படிப்புக்கு பணம் இல்லாமல் இருக்க, சிறுவனாக இருந்த விஜயாகாந்த் அந்த செயினை கழட்டி கொடுத்து ‘இதை அடமானம் வைத்து படிப்பு செலவுக்கு பயன்படுத்திக்கொள்ளுங்கள்’ என சொல்லி செயினை கொடுத்துவிட்டாராம்.

இதையும் படிங்க: பாடலை கேட்டு பூரித்து போன விஜயகாந்த்!.. இளையராஜாவுக்கு என்ன செய்தார் தெரியுமா?…

அவரின் கழுத்தில் செயின் இல்லாததை பார்த்த விஜயகாந்தின் அப்பா அவரை செமையாக போட்டு அடுத்து மிரட்டி கேட்டபோது நடந்ததை சொன்னாராம். ‘அது நான் சம்பாதித்தது.. நீ சம்பாதிச்சு மத்தவங்களுக்கு உதவு’ என அவரின் அப்பா சொல்ல, தன்னுடைய சம்பாத்தியத்தில் மட்டுமே பிறருக்கு உதவ வேண்டும்.. அதேபோல், என்னுடைய கழுத்தில் தங்க செயின் போட்டால் அது என் உழைப்பில் இருந்து வந்திருக்க வேண்டும் உறுதி எடுத்தாராம். அதன்பின் அவர் வீட்டிலிருந்த எந்த தங்க நகையையும் அணியவில்லை

சினிமாவில் நடிகனாக சம்பாதித்து அந்த பணத்தில்தான் தனது கழுத்து தங்க செயினை வாங்கி போட்டிருக்கிறார் விஜயகாந்த். திருமணமான பின் அந்த செயினை பிரேமலதாவுக்கு போட்டுவிட்டாராம். இந்த தகவலை பிரேமலதா சமீபத்தில் ஊடகம் ஒன்றில் பகிர்ந்துகொண்டார்.

இதையும் படிங்க: எல்லோர் முன்னிலையிலும் கன்னத்தில் பளார்விட்ட விஜயகாந்த்.. வன்மம் வளர்த்து பழிவாங்கிய வடிவேலு!..

 

Related Articles

Next Story