Connect with us

கேப்டன் யாருக்குத்தான் உதவல!.. நடிகர் ஷாமை மிரட்டியவர்களை பந்தாடிய விஜயகாந்த்!..

shyam

Cinema News

கேப்டன் யாருக்குத்தான் உதவல!.. நடிகர் ஷாமை மிரட்டியவர்களை பந்தாடிய விஜயகாந்த்!..

2001 ஆம் ஆண்டு வெளியான 12பி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகனாக அறிமுகமானார் நடிகர் சியாம். துறு துறு நடிப்பு, வசீகரமான தோற்றம், பெண்களுக்கு பிடித்தமான முகத்தோற்றம் என அறிமுகமான புதிதிலேயே அனைவரையும் கவர்ந்தார் சியாம்.

நடித்த முதல் படமே நல்ல வரவேற்பை பெற்றது. அதுவும் சிம்ரன், ஜோதிகா என முன்னனி நடிகைகளுடன் ஜோடியாக நடித்தார் சியாம். அந்த படத்தின் வெற்றி அடுத்தடுத்த இடங்களுக்கு கொண்டு சென்றது. சினேகாவுடன் ‘ஏய் நீ ரொம்ப அழகா இருக்க’ படத்திலும் ஹீரோவாக நடித்தார்.

kanth1

shaaam

இயற்கை படம் ஓரளவு மக்கள் மனதில் நிலைத்து நின்றது. தொடர்ந்து படங்களில் நடித்து வந்த சியாமுக்கு படவாய்ப்புகள் குறைய தொடங்கியது. நீண்ட நாள்களுக்கு பிறகு வாரிசு படத்தில் விஜய்க்கு அண்ணனாக நடித்திருக்கிறார் சியாம். இந்த நிலையில் வாரிசு பட ரிலீஸிலிருந்து தொடர்ந்து பேட்டிகளில் காணமுடிந்த சியாம் கேப்டன் விஜயகாந்த் அவருக்கு செய்த ஒரு உதவியை பற்றியும் நினைவு கூர்ந்தார்.

இதையும் படிங்க : துணிவு படம் இந்தளவுக்கு வந்ததுக்கு காரணமே இவர்தான்… யார்ன்னு தெரிஞ்சா அதிர்ச்சியாகிடுவீங்க!!

ஏதோ ஒரு படத்தில் நடித்துக் கொண்டிருந்த சியாமுக்கு அந்த படத்தின் தயாரிப்பாளர் ஒருவர் சம்பளத்தில் இழுத்தடித்துக் கொண்டு இருந்தாராம். உடனே சியாம் சம்பளத்தை ஒழுங்காக கொடுத்தால் தான் டப்பிங்கில் பேசவருவேன் என்று சொல்லியிருக்கிறார். அதற்கு அந்த தயாரிப்பாளர் ஆள்களை அனுப்பி சியாமை மிரட்டினாராம்.

shaam

shaam

தொடர்ந்து தொந்தரவு கொடுத்த தயாரிப்பாளரின் தொல்லை தாங்க முடியாத சியாம் அப்போது நடிகர் சங்கத் தலைவராக இருந்த விஜயகாந்திற்கு போன் செய்து நடந்த விவரத்தை சொல்லியிருக்கிறார். உடனே விஜயகாந்த் நீ போனை அணைத்துவிடு, நான் பார்த்துக் கொள்கிறேன் என்று கூறிவிட்டு

சம்பந்தப்பட்ட தயாரிப்பாளருக்கு போன் செய்து இனிமேல் சியாம் விஷயத்தில் தலையிட கூடாது, அது சியாம் பிரச்சினை கிடையாது, நடிகர் சங்க பிரச்சினை என்று அவர் பாணியில் மிரட்டி தயாரிப்பாளரை கப்சிப் ஆக்கிவிட்டாராம். இந்த பிரச்சினையால் மனவிரக்தியில் இருந்த என்னை மீட்டதே கேப்டன் தான் என்று சியாம் கூறினார்.

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் சினிரிப்போர்டர்ஸ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்
Continue Reading
To Top