நடிகையை ரவுண்டு கட்டிய ரவுடிகள்....வேட்டியை மடிச்சிக்கட்டி துவம்சம் செய்த கேப்டன்....
திரையுலகில் நல்ல மனிதர், எல்லோருக்கும் உதவுபவர் என்கிற பெயர் மட்டுமல்ல. சக நடிகைகள்,நடிகர்கள் மற்றும் சினிமா துறையினரை சேர்ந்த யாராக இருந்தாலும் சரி, யாருக்கு ஒரு பிரச்சனை என்றாலும் உடனே களம் இறங்கி அவர்களுக்கு உதவுவதில் முதல் நபராக வருபவர்தான் கேப்டன் என அழைக்கப்படும் விஜயகாந்த். திரையுலகினரை சேர்ந்த பலருக்கும் இவர் வெளியே தெரியாமல் பல உதவிகளை செய்துள்ளார்.
அதிரடி சண்டை காட்சிகளில் நடித்த ஆக்சன் ஹீரோவாக வலம் வந்தவர்தான் விஜயகாந்த். திரையில் மட்டும்தான் ரவுடிகளை துவம்சம் செய்வார் என்பது இல்லை, நிஜ வாழ்க்கையிலும் அவர் அப்படித்தான். படப்பிடிப்புக்கு இடையூறாக யாராவது தொந்தரவு செய்தால், வேஷ்டியை மடிச்சி கட்டி அவரே களத்தில் இறங்கி அதை சரி செய்வார். அப்படி ஒரு நடிகைக்கு வந்த பிரச்சனையை அவர் எப்படி சமாளித்தார் என்பதைத்தான் இங்கே பார்க்க போகிறோம்.
சலங்கை ஒலி திரைப்படத்தில் நடித்து தமிழ் சினிமா ரசிகர்களின் மனதில் குடியேறியர் ஜெயப்பிரதா. அதன்பின் பல திரைப்படங்களில் இவர் நடித்துள்ளார். தமிழ் சினிமா மட்டுமில்லாமல் தெலுங்கு, ஹிந்தி திரைப்படங்களிலும் இவர் நடித்துள்ளார். அரசியலில் குதித்த அவர் ஆந்திர மாநில எம்.பி.யாகவும் இருந்துள்ளார்.
இவர் நடிகர் விஜயகாந்துடன் ஏழை ஜாதி படத்தில் நடித்திருந்தார். அப்படத்திற்கு அவர் தயாரிப்பாளரும் கூட. இப்படத்திற்கான படப்பிடிப்பு பெங்களூரில் நடந்தபோது, ஜெயப்பிரதா, விஜயகாந்த் அனைவரும் ஒரு ஹோட்டலில் தங்கியிருந்தனர். அப்போது வெளியே சென்ற ஜெயப்பிரதாவை சில ரவுடிகள் சூழ்ந்து கொண்டு, டீஸ் செய்ததோடு, அவரை அங்கிருந்து நகர விடாமல் செய்தனர்.
அப்போது செல்போன் எல்லாம் கிடையாது. இந்த தகவலை ஜெயப்பிரதா தான் தங்கியிருந்த ஹோட்டல் எண்ணுக்கு போன் செய்து படப்பிடிப்பு தொடர்பான யாராவது அங்கிருந்தால் போனை கொடுக்க சொல்ல, அந்த நேரத்தில் விஜயகாந்த் சரியாக அங்கு வர, அவரே ஜெயப்பிரதாவிடம் பேசி அவரின் பிரச்சனையை தெரிந்து கொண்டு, யாரையும் அழைக்காமல் வேஷ்டியை மடிச்சி கட்டிக்கொண்டு அங்கு தனியாளாக சென்று அங்கிருந்த ரவுடிகளை அடித்து விரட்டி ஜெயப்பிரதாவை பாதுகாப்பாக அழைத்து வந்தாராம்.
இந்த தகவலை விஜயகாந்துடன் பல வருடங்கள் பயணித்த நடிகர் மீசை ராஜேந்திரன் ஒரு யுடியூப் வீடியோவில் தெரிவித்துள்ளார்.
கேப்டன் நிஜ வாழ்க்கையிலும் ஆக்ஷன் ஹீரோதான் போல!...