Cinema History
ஸ்கூல்ல படிக்கும்போதே வள்ளலாக இருந்த விஜயகாந்த்!.. அப்பாவின் கோபத்துக்கு ஆளான கேப்டன்..
விஜயகாந்த் என்றால் எல்லோருக்கும் நினைவுக்கு வருவது பிறருக்கு உதவும் அவரின் குணம்தான். அதுதான் அவரை சிறந்த மனிதராக மக்களிடம் அடையாளம் காட்டியது. நடிகர், அரசியல்வாதி என்பதை தாண்டி மற்றவர்களுக்கு ஒன்று என்றால் உடனே அதை சரி செய்ய நினைக்கும் அவரின் குணமும், பசிப்பவர்களுக்கு உணவளிக்கும் அவரின் ஈகை குணமும்தான் அவரின் மறைவுக்கு பலரையும் கண்ணீர் விட வைத்தது.
விஜயகாந்த் ஒன்றும் பிழைப்புக்காக சினிமாவுக்கு வந்தவர் இல்லை. மதுரையில் அவரின் குடும்பம் வசதியானது. அவரின் அப்பா சில தொழில்களை செய்து வந்தவர். இரண்டு வயதிலேயே அம்மாவை இழந்த விஜயகாந்த் ஹாஸ்டலில்தான் படித்தார். அவரின் அப்பா 2வது திருமணம் செய்து கொண்டார்.
இதையும் படிங்க: விஜயகாந்த் 120 முறை பார்த்து ரசித்த அந்த திரைப்படம்!.. வெறித்தனமான ரசிகரா இருந்தி்ருக்காரே!..
விஜயகாந்த் டீன் ஏஜை எட்டியபின் ஊரில் சண்டியராக வலம் வந்ததால் அவரின் அப்பா அழகர் சாமி ரைஸ் மில் வைத்து கொடுத்து அந்த வியாபாரத்தை பார்க்க சொன்னார். பிறருக்கு உதவும் குணம் என்பது விஜயகாந்துக்கு நடிகரான பின்னர் வந்தது இல்லை. சிறு வயதிலிருந்தே அவர் அப்படித்தான். ஒருமுறை அவர் பள்ளியில் படித்துகொண்டிருந்தபோது ஒரு ஏழை மாணவர் பள்ளிக்கட்டணம் செலுத்த முடியாமல் தவிக்க அப்பா கழுத்தில் போட்டு விட்ட தங்க செயினை கழட்டி கொடுத்தார் விஜயகாந்த். இதற்காக அப்பாவிடம் செமையாக அடியும் வாங்கினார்.
அப்போதுதான் இனிமேல் நாம் சம்பாதித்து அந்த பணத்தில் மற்றவர்களுக்கு உதவி செய்ய வேண்டும் என நினைத்தாராம். தேவகோட்டையில் உள்ள டிபிரிட்டோ எனும் பள்ளியில்தான் விஜயகாந்த் படித்தார். அப்போதே ஏழை மாணவர்களுக்கு நோட்டு, புத்தகம், பென்சில், பேனா இதெல்லாம் வாங்கி கொடுப்பாராம்.
இதையும் படிங்க: முதல் வாய்ப்பு கொடுத்தவர்கிட்டயே இப்படியா?!.. கலைஞர் விழாவில் மட்டமாக நடந்து கொண்ட வடிவேலு…
அதேபோல், மதுரை நாடார் பள்ளியில் அவர் படித்தபோது ‘என் மகன் எதாவது கேட்டால் கொடுங்கள்’ என அங்கிருந்த ஒரு கடையில் சொல்லி வைத்திருக்கிறார் அவரின் அப்பா. அந்த கடையிலிருந்தும் நோட்டு, புத்தகங்கள், பேனா ஆகியவற்றை வாங்கி ஏழை மாணவர்களுக்கு கொடுத்திருக்கிறார் விஜயகாந்த்.
அதேபோல், ரைஸ் மில்லை அவர் கவனித்துக்கொண்டிருந்தபோது பல பெண்கள் அங்கே வேலை செய்வார்கள். ஒருநாள் ஒரு பெண் அவரிடம் வந்து ‘தம்பி.. நாள் முழுக்க அரியில்தான் வேலை செய்கிறேன். ஆனால், என் வீட்டில் அரிசி இல்லை. சம்பளம் வர இன்னும் 2 நாட்கள் ஆகும். ஆனால், என் வீட்டில் அரசி இல்லை’ என சொல்ல அப்பாவுக்கு தெரியாமல் ஒரு மூட்டை அரசியை தூக்கி அவரிடம் கொடுத்திருக்கிறார் விஜயகாந்த். இதற்காகவெல்லாம் அப்பாவின் கோபத்திற்கு ஆளானாலும் விஜயகாந்த் தன்னை மாற்றிக்கொள்ளவே இல்லை என்பதால்தான் இப்போது மறைந்தபின்னரும் மக்களின் மனதில் நீங்கா இடத்தை பிடித்திருக்கிறார்.
இதையும் படிங்க: அரசியல்வாதிகளுக்கு வாழ்க்கை கொடுக்கிறது இல்லப்பா!… ராதிகா பையனிடம் திமிராக பேசிய வடிவேலு!…