Connect with us
krvk

Cinema History

தனுஷ் குடும்பத்திற்கு இவ்ளோ விஷயம் செய்துள்ளாரா விஜயகாந்த்? இதுவரை வெளிவராத தகவல்..

நடிகர் விஜயகாந்தை புரட்சிகலைஞர், கருப்பு எம்ஜிஆர் என்றெல்லாம் சொல்வார்கள். உதவி என்று வந்துவிட்டால், அவர் எம்ஜிஆருக்கு அடுத்தபடியாக கொடை வள்ளல் என்றே சொல்வார்கள். அவரைப் பார்க்க வருபவர்களைப் பசியாற்றாமல் விட மாட்டார். படப்பிடிப்பிலும் சரி. அங்குள்ள லைட்மேன் முதல் டெக்னீஷியன், நடிகர்கள், இயக்குனர்கள் என எல்லோருக்குமே சம உணவைத் தான் கொடுப்பாராம்.

அவரைப்பற்றிய இன்னொரு சுவாரசிய செய்தி வந்துள்ளது. நடிகர் தனுஷூக்கு 2 சகோதரிகள். ஒரு அக்கா பல்டாக்டராக இருக்கிறார். இன்னொரு அக்கா மகப்பேரு மருத்துவராக அப்போலோவில் இருக்கிறார்.

அப்போலோவில் உள்ள அக்கா ஆரம்பத்தில் டாக்டருக்குப் படிக்க விரும்பினாராம். ஆனால் அவருக்கு பிளஸ் 2வில் கட் ஆப் மார்க் குறைந்து விட்டதாம். அதனால் டாக்டர் சீட் கிடைக்காமல் போனது. அதை நினைத்து வருத்தப்பட்டு அழுதபடி சாப்பிடாமல் இருந்தாராம்.

இதையும் படிங்க…. விஜயகாந்தின் நிலை திட்டமிட்டு நடந்ததே… அப்போ புரியல.. இப்போ தான் தெரியுது.. பிரபலம் சொன்ன பகீர் தகவல்..!

அப்போது விஜயகாந்த் கஸ்தூரி ராஜாவின் இயக்கத்தில் வீரம் வெளைஞ்ச மண்ணு படத்தில் நடித்து வந்தார். எதேச்சையாக ஒரு முறை விஜயகாந்த் அவரது வீட்டிற்கு வர, தனுஷின் அக்கா அழுதபடி இருந்தாராம். ‘பாப்பா ஏன் அழுகுது?’ன்னு கேட்டுள்ளார் விஜயகாந்த். மெடிக்கல் சீட் கிடைக்காத விஷயத்தைப் பற்றி விஜயகாந்த்திடம் சொல்லி இருக்கிறார் கஸ்தூரி ராஜா.

உடனே வாங்க என்னோடு என்று அவரை அழைத்தாராம் கேப்டன். நேராக ராமச்சந்திரா மெடிக்கல் காலேஜ் நிறுவனர் உடையாரிடம் போனார்களாம். கஸ்தூரி ராஜாவோ வேண்டாம்… பணம் கொடுத்து சீட் வாங்க வேண்டாம்னு சொன்னாராம். ‘அப்புறம் ஏன் குழந்தைகளைப் பெத்துக்கறீங்கன்னு?’ கேட்ட விஜயகாந்த் உடையாரிடம் போய் பேசினாராம்.

எவ்வளவு பணம் தருவீங்கன்னு உடையார் கேட்க, 20 லட்சம் என சொல்ல, கஸ்தூரி ராஜாவோ 10 என்றாராம். உடனே ஒரு ஸ்கீம் இருக்கு. அதுல 17 லட்சம் இப்ப கட்டுங்க. வருடம் 18 ஆயிரம் மட்டும் கட்டுங்க. போதும் என்றாராம் உடையார்.

இதையும் படிங்க…. அந்த வானத்தைப் போல மனம் படைச்ச மன்னவனே!.. நடிகர்கள் – இயக்குனர்கள் நெகிழ்ச்சி

அதன்படி தனுஷின் அக்கா மருத்துவக்கல்லூரியில் சேர்ந்துவிட்டாராம். இப்போது அவர் அப்போலோவில் பெரிய மகப்பேறு மருத்துவர். கேப்டன் விஜயகாந்த் எப்படிப்பட்ட நல்ல உள்ளம் கொண்ட மனிதர் என்பதை நாம் இந்த ஒரு விஷயத்தில் இருந்தே கண்டு கொள்ளலாம். எத்தனையோ பேர் பசிக்கு உணவளித்து இருக்கலாம். ஆனால் ஒரு டாக்டரையே நாட்டுக்கு அளித்த மனிதாபிமானம் கொண்டவர் தான் கேப்டன்.

google news
Continue Reading

More in Cinema History

To Top