தூக்கிவிட்ட விஜயகாந்த்.. நன்றி மறந்த விஜய்.. சினிமாவுல இதலாம் சகஜம்தான்!....

by சிவா |
vijayakanth
X

சினிமாவில் நுழைவது ஒன்றும் சுலபமில்லை. அதுவும் ஹீரோவாக நடிக்க வேண்டுமெனில் இயக்குனர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் அலுவலகத்திற்கு நடையாக நடிக்க வேண்டும். ஒரு வாய்ப்பு கிடைத்தாலும் அது நல்ல கதையாக அமைய வேண்டும். அது எல்லோருக்கும் அமையாது. அதேநேரம், தயாரிப்பாளர் மற்றும் இயக்குனர்களின் மகன் என்றால் சினிமாவில் நுழைவது மிகவும் சுலபம். ஆனாலும் அவர்களும் மக்கள் ரசிக்கும்படி படங்களை கொடுத்தால் மட்டுமே சினிமாவில் நிலைக்க முடியும்.

Vijay

Vijay

சில சமயம் வாரிசு நடிகர்களும் சரியான வெற்றி கிடைக்காமல் போராடுவார்கள். இந்த நிலமை விஜய்க்கும் வந்தது. அப்பா சந்திரசேகர் இயக்குனர் என்பதால் சுலபமாக சினிமாவுக்கு வந்துவிட்டாலும் அவர் தொடக்கத்தில் நடித்த படங்கள் ஒன்றும் பெரிய வெற்றியை பெறவில்லை. விஜயை எப்படியாவது மேலே கொண்டு வந்துவிட வேண்டும் என எஸ்.ஏ.சந்திரசேகர் போராடிக்கொண்டிருந்த காலம் அது.

vijayakanth

அந்த சமயத்தில் விஜயகாந்தின் உதவியை நாடினார் எஸ்.ஏ.சி. ஏனெனில், ‘சட்டம் ஒரு இருட்டறை’ என்கிற திரைப்படம் மூலம் விஜயகாந்தை ஹீரோவாக்கியவர் எஸ்.ஏ.சந்திரசேகர்தான். அதோடு, அவருக்கு சில ஹிட் படங்களையும் கொடுத்தவர். அந்த நன்றி மறவாத விஜயகாந்த் விஜய் நடித்த ‘செந்தூரபாண்டி’ திரைப்படத்தில் அவரின் அண்ணணாக நடிக்க ஒப்புக்கொண்டார்.

இத்தனைக்கும், விஜயகாந்த் அப்போது பெரிய ஹீரோவாக இருந்தார். விஜயை வளர்த்துவிட நினைத்த விஜயகாந்த் அப்படத்திற்காக பல நாட்கள் கால்ஷீட் கொடுத்து நடித்த கொடுத்ததோடு மட்டுமில்லாமல், தனது ரசிகர்கள் மன்றம் சார்பாக பல ஊர்களிலும் விஜய்க்கு போஸ்டர் அடித்து ஒட்ட சொன்னார். விஜயகாந்தால்தான் அப்படம் வெற்றியும் பெற்றது. அதன்பின் விஜய் கொஞ்சம் கொஞ்சமாக வளர்ந்து முன்னேறி தற்போது 100 கோடிக்கும் மேல் சம்பளம் பெறும் நடிகராக மாறியுள்ளார்.

shanmuga

விஜயகாந்தோ உடல் நிலை சரியில்லமால் வீட்டில் இருக்கிறார். அவரின் மகன்கள் சினிமாவில் நடிக்க துவங்கியுள்ளனர். அவரின் மூத்த மகன் சண்முக பாண்டியன் மதுரை வீரன் என்கிற படம் மூலம் சினிமாவில் அறிமுகமானார். அதன்பின் சகாப்தம் என்கிற படத்திலும் நடித்தார். அதன்பின் தமிழன் என்று சொல் என்கிற படம் துவங்கப்பட்டு அறிவிப்போடு நின்றுவிட்டது.

விஜய் நினைத்தால் சண்முக பாண்டியன் நடிக்கும் ஒரு திரைப்படத்தில் ஒரு சிறிய வேடத்தில் நடித்து கொடுத்து அவரையும் ஒரு வெற்றிப்பட ஹீரோவாக மாற்ற முடியும். கேப்டனுக்கு இருந்த நன்றியுணர்ச்சி விஜய்க்கு இல்லை என விஜயகாந்தின் ஆதரவாளர்கள் சமூகவலைத்தளங்களில் பேச துவங்கியுள்ளனர்.

இதையும் படிங்க: ஜெயலலிதாவை கிண்டல் செய்து கண்ணதாசன் எழுதிய பாடல்… ஓஹோ இப்படியெல்லாம் நடந்துருக்கா??

Next Story