நடிகர்களுக்காக குரல் கொடுத்த கேப்டன்...! நடிகர் சங்கத்தால் புறக்கணிக்கப்பட்ட சம்பவம்...

தமிழ் சினிமாவின் ஒப்பற்ற கலைஞனாக விளங்குபவர் நடிகர் விஜயகாந்த். ஆரம்பகாலத்தில் சினிமாவில் நடிப்பதற்காக ரோடு ரோடாக திரிந்து வாய்ப்பு கேட்டு வந்த கேப்டன் ஒரு காலத்தில் ரஜினிக்கு செக்யூரிட்டியாகவும் நின்றிருக்கிறார்.
கிட்டத்தட்ட 150 படங்களுக்கும் மேல் நடித்து புரட்சிக்கலைஞராக திகழும் விஜயகாந்த் சினிமாவில் இருக்கும் போதே ரசிகர்களுக்கும் சரி மக்களுக்கும் சரி பல நல்ல உதவிகளை செய்துள்ளார். நடிகர் சங்க தலைவராக இருந்த சமயத்தில் சக நடிகர்களின் குறைகளை தீர்த்து வைத்து அவர்கள் வாழ்க்கைக்க்கு வழிகாட்டியவர்.
மேலும் அனைத்து நடிகர்களின் அபிமானத்திற்கு ஆளாகியவர் விஜயகாந்த். சமீபத்தில் இவரது 70வது பிறந்த நாளை பிரபல யுடுயூப் சேனல் ஒன்று நடத்தியது. அந்த விழாவில் விஜயகாந்த் குடும்பத்தார், அவருக்கு நெருக்கமானவர் என பலர் கலந்து கொண்டனர்.
வருத்தத்திற்குள்ளான விஷயம் என்னவென்றால் இதில் முன்னனி நடிகர்கள் யாரும் கலந்து கொள்ளவில்லை என்பது தான். அதுமட்டுமில்லாமல் நடிகர் சங்க நிர்வாகிகள் யாரும் வரவில்லை. நடிகர் கார்த்தி மட்டும் வந்து பிறந்த நாள் வாழ்த்தை கூறினார். அநேக நடிகர்களுக்காக குரல் கொடுத்த விஜயகாந்துக்கு நடிகர் சங்கத்தில் இருந்து எந்த ஒரு தகவலும் வரவில்லை என்பதுதான் மிகவும் வருத்தத்தை அளிக்கிறது என கோடம்பாக்கத்தில் பேசி வருகின்றனர். முக்கியமாக இந்த பிறந்த நாள் விழாவை நடிகர் சங்கத்தில் இருந்து தான் ஏற்பாடு செய்திருக்க வேண்டும் ஆனால் அதையும் அவர்கள் பண்ணவில்லை.