வயிராற சாப்பாடு போடுறவர்!.. ஒட்டுமொத்த யுனிட்டையும் பட்டினியில் போட்ட கேப்டன்.. காரணமாக இருந்த சிறுவன்,,
தமிழ் சினிமாவில் என்.எஸ்.கிருஷ்ணன், எம்ஜிஆருக்கு அடுத்தப்படியாக வாரி வழங்கும் வள்ளலாக இருந்தவர் நடிகர் விஜயகாந்த். இதற்கு முழு காரணம் அவர் சினிமாவிற்குள் வருவதற்கு முன் எம்ஜிஆரின் பெரும்பாலானபடங்களை பார்த்திருக்கிறாராம்.
அவரால் ஈர்க்கப்பட்டு தான் அவரின் சில பழக்கங்களும் விஜயகாந்திடம் இருந்திருக்கின்றன என மேடை பேச்சாளரான ஆலங்குடி வெள்ளச்சாமி கூறினார். சினிமாவோடு இணைந்து சமூக அக்கறையும் கொண்டவராகவே விஜயகாந்த் வாழ்ந்திருக்கிறார்.முகாம்களில் தமிழர்கள் கஷ்டப்படுவதை பார்த்து தன்னுடைய பிறந்த நாள் கொண்டாடத்தை வேண்டாம் என கூறியிருக்கிறார் விஜயகாந்த்.
மேலும் கட்சியில் தன்னை இணைத்துக் கொள்ள ஒரு சில போரட்டங்களிலும் ஈடுபட்டிருக்கிறார். அதுவும் மக்களுக்காகத்தான்.இதுஒரு புறம் இருக்க சினிமாவில் வேலை பார்க்கும் ஊழியர்களுக்கு மூன்று முறைகளில் சாப்பாடு வழங்குவார்கள். கடை நிலை ஊழியர்கள்,இடை நிலை ஊழியர்கள், முதல் நிலை ஊழியர்கள் என்று பிரித்து அவர்களுக்கு ஏற்ற வகையில் தான் சாப்பாடு பரிமாறுவார்கள்.
ஆனால் அந்த நிலையை மாற்றியவர் விஜயகாந்த் என வெள்ளச்சாமி கூறினார். மேலும் தனக்கு எந்த சாப்பாடு வழங்கப்படுகிறதோ அதே சாப்பாடு தான் மற்ற ஊழியர்களுக்கும் வழங்கப்பட வேண்டும் என அதில் கவனமாக இருந்தார். அது அசைவ உணவாக இருந்தாலும் அதே உணவை தான் அவர்களுக்கும் பரிமாற வேண்டும் என கூறிவந்தார்.
இதையும் படிங்க : “அன்போ? அடியோ? எனக்கு கொடுக்கும்போது கொஞ்சம் யோசிச்சி கொடுக்கனும்”… வெளியானது “வாரிசு” டிரைலர்…
அவர் வீட்டிற்கு யார் எந்த சமயத்தில் போனாலும் சாப்பாடு போட்டு தான் திருப்பி அனுப்புவாராம். இந்த நிலையில் அவர் உளவுத்துறை படத்தில் கோவையில் படப்பிடிப்பில் இருக்கும் போது சில சுற்றுலா பயணிகள் பேருந்தில் செல்ல விஜயகாந்த் வந்திருக்கிறார் என்றதும் அவர்கள் அனைவரும் கேப்டனை பார்க்க போயிருக்கின்றனர்.அவர்களை பார்க்க விஜயகாந்த் அனுமதி அளித்திருக்கிறார்.
வந்ததும் அவர்களிடம் விஜயகாந்த் கேட்ட முதல் வார்த்தை எல்லாரும் சாப்பிட்டீர்களா? என்று . அதற்கு அனைவரும் சாப்பிட்டு விட்டோம் என்று சொல்ல அந்த கூட்டத்தில் உள்ள சிறுவன் மட்டும் ‘அவர்கள் பொய் சொல்கிறார்கள், யாரும் சாப்பிடவில்லை’ என்று சொல்லியிருக்கிறான். அதைக் கேட்டதும் விஜயகாந்த் யுனிட்டில் அனைவருக்கும் வைத்திருந்த சாப்பாட்டை எடுத்து வர சொல்லி சாப்பிட வைத்தாராம்.
அதன் பிறகு மறுபடியும் யுனிட் ஆள்களுக்கு தேவையான சாப்பாட்டை வரவழைத்து ஊழியர்களுக்கு வழங்க சொல்லியிருக்கிறார். இத்தனை நல்லுள்ளம் படைத்த நம்ம கேப்டன் இருந்தும் இல்லாதது போல் இருப்பது அனைவருக்கும் மிகுந்த வேதனையை அளிக்கிறது என்று பேச்சாளர் ஆலங்குடி வெள்ளச்சாமிகூறினார்.