‘பெட்ரோமாக்ஸ் லைட்டேதான் வேணுமா?’ காமெடி உருவாக காரணமே விஜயகாந்துதான்!.. என்னப்பா சொல்றீங்க!..
ஹாலிவுட்டில் லாரல் ஹார்டி இரட்டையர்கள் போல தமிழ் சினிமாவில் இரட்டையர்களாக வந்து ரசிகர்களை சிரிக்க வைத்தவர்கள் கவுண்டமணி - செந்தில் என்று சொல்லலாம். இவர்கள் இருவரும் இணைந்து பல நூறு படங்களில் காமெடி காட்சிகளில் நடித்து ரசிகர்களை சிரிக்க வைத்திருக்கிறார்கள்.
இவர்கள் இருவரையும் திரையில் காட்டினாலே ரசிகர்கள் சிரித்துவிடுவார்கள். 70களின் இறுதியில் இருவரும் சினிமாவில் நுழைந்து கிட்டத்தட்ட 25 வருடங்களுக்கும் மேல் முன்னணி காமெடி நடிகர்களாக வலம் வந்தார்கள். கவுண்டமணி இடைவெளி விட்டபின்னர்தான் சந்தானம், விவேக், வடிவேலு போன்றவர்கள் மேலே வந்தனர்.
இதையும் படிங்க: கவுண்டமணியால மொத்த படமும் மாறிப்போச்சு!.. பல வருடங்கள் கழித்து சொன்ன சுந்தர்.சி..
சினிமாவுக்கு வருவதற்கு முன்பு கவுண்டமணியும், செந்திலும் நாடகங்களில் நடித்து வந்தார்கள். பதினாறு வயதினிலே படத்தில் பாக்கியராஜின் உதவியால் சினிமாவுக்கு வந்தார் கவுண்டமணி. அதே பாக்கியராஜ்தான் செந்திலுக்கு தூரல் நின்னுபோச்சு படத்தில் ஒரு நல்ல வேஷம் கொடுத்து தூக்கிவிட்டார்.
கவுண்டமணி - செந்தில் பல படங்களில் நடித்திருந்தாலும் ரசிகர்களால் எப்போதும் மறக்க முடியாத காமெடி காட்சிகளை கொண்ட படமெனில் அது ஆர். சுந்தர்ராஜன் இயக்கத்தில் விஜயகாந்த் நடித்த ‘வைதேகி காத்திருந்தாள்’ திரைப்படம்தான். இந்த படத்தில் இடம் பெற்ற ‘பெட்ரோமாக்ஸ் லைட்டேதான் வேணுமா?’ என கவுண்டமணி பேசிய வசனம் ரசிகர்களால் பெரிதும் ரசிக்கப்பட்டது.
இதையும் படிங்க: இப்ப கால்ல விழுறான்.. பின்னாடி காலை வாரி விடுவான்!.. வடிவேலுவை அப்போதே கணித்த கவுண்டமணி!.
அதன்பின் பல திரைப்படங்களிலும் இந்த வசனத்தை பல நடிகர்களும் பேசினார்கள். சாதாரண மக்களும் இந்த வசனத்தை தங்களின் வாழ்க்கையில் பயன்படுத்துகின்றனர். இந்த காட்சி எப்படி உருவானது என பார்ப்போம். ஒருநாள் விஜயகாந்த் படப்பிடிப்பு வரவில்லை. அவர் வருவதற்கு 2 மணி நேரம் ஆகும் என சொல்லப்பட்டது.
2 மணி நேரத்தை ஏன் வீணடிக்க வேண்டும் என நினைத்த ஆர். சுந்தர்ராஜன் ஒரு பெட்ரோமாக்ஸ் லைட்டை ஏற்பாடு செய்ய சொன்னார். அந்த லைட் வந்ததும், கவுண்டமணி - செந்திலை வைத்து அந்த காட்சியை எடுத்திருக்கிறார். ஒரு நடிகர் வருவதற்கு தாமதமானதால் இப்படி ஒரு காமெடி காட்சியை உருவாகி காலத்தையும் தாண்டி நிற்பது ஆச்சர்யமான ஒன்றுதான்.