Connect with us

அர்ஜூன் வாழ்க்கையில் அவருக்கே தெரியாமல் ஒளி ஏற்றி வைத்த விஜயகாந்த்… ஓஹோ இப்படி எல்லாம் நடந்துருக்கா?

Arjun

Cinema History

அர்ஜூன் வாழ்க்கையில் அவருக்கே தெரியாமல் ஒளி ஏற்றி வைத்த விஜயகாந்த்… ஓஹோ இப்படி எல்லாம் நடந்துருக்கா?

ரசிகர்களின் ஆக்சன் கிங் ஆக திகழ்ந்து வரும் நடிகர் அர்ஜூன், தொடக்கத்தில் பல கன்னட திரைப்படங்களில் நடித்து வந்தார். எனினும் தமிழில் “நன்றி” என்ற திரைப்படம் மூலம்தான் அறிமுகமானார். இத்திரைப்படம் 1984 ஆம் ஆண்டு வெளிவந்தது.

Nandri

Nandri

“நன்றி” திரைப்படத்தை இராம நாராயணன் இயக்கியிருந்தார். இத்திரைப்படம் கன்னடத்தில் வெளியான “தாலியா பாக்யா” என்ற திரைப்படத்தின் ரீமேக் ஆகும்.

முதலில் “தாலியா பாக்யா” திரைப்படத்தை ரீமேக் செய்ய முடிவெடுத்த இராம நாராயணன், விஜயகாந்த்தை இத்திரைப்படத்தில் ஹீரோவாக ஒப்பந்தம் செய்தார். ஆனால் விஜயகாந்த் மிக கூடுதலாக சம்பளம் கேட்டார்.

Rama Narayanan

Rama Narayanan

ஆதலால் இத்திரைப்படத்தின் தயாரிப்பாளரான ஏ.வி.எம்.ராஜன் கொஞ்சம் சம்பளத்தை குறைத்துக்கொள்ள முடியுமா என விஜயகாந்த்திடம் கேட்க, அதற்கு விஜயகாந்த் தனது சம்பளத்தை குறைத்துக்கொள்ள மறுத்து விட்டார்.

இதன் காரணமாக கன்னட படமான “தாலியா பாக்யா” திரைப்படத்தில் நடித்த கதாநாயகனையே “நன்றி” திரைப்படத்தில் கதாநாயகனாக அறிமுகப்படுத்தலாம் என்று இயக்குனர் இராம நாராயணனும் தயாரிப்பாளர் ஏ.வி.எம்.ராஜனும் முடிவு செய்தனர்.

Actor Vijayakanth

Actor Vijayakanth

அதன் படி “தாலியா பாக்யா” திரைப்படத்தில் நடித்த அர்ஜூனையே “நன்றி” திரைப்படத்தில் நடிக்க வைத்தார் இராம நாராயணன். இப்படித்தான் தமிழில் அர்ஜூன் அறிமுகமானார். இவ்வாறு ஒரு வகையில் அர்ஜூனின் கேரியருக்கு மறைமுகமாக ஒரு முக்கிய பங்காற்றியிருக்கிறார் விஜயகாந்த்.

இதையும் படிங்க: இந்த பேய் படங்கள் எல்லாம் உண்மை சம்பவங்களா? ஆத்தாடி… ஒரே திகிலா இருக்கே!

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் சினிரிப்போர்டர்ஸ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்
Continue Reading
To Top