Categories: latest news

ரஜினி வீட்டு தரையில் அமர்ந்து தர்ணா செய்த விஜயகாந்த்.! பின்னணி பகீர் சம்பவங்கள்..,

தற்போது நடிகர் சங்கம் அதன் தேர்தல் , அதன் களோபரங்கள் என ஒரே கூத்தாக தான் நமக்கு தெரிகிறது. ஆனால், ஒரு காலத்தில் ஒரு மனிதன் அச்சங்க தலைவராக இருந்த போது கட்டியாண்டு கொண்டு இருந்தார். கட்டுக்கோப்பாக இருந்துள்ளது சங்கம்.

Also Read

அப்போது தான் நடிகர் சங்க கட்டட கட்ட நிதி திரட்டுவது, நலிந்த கலைஞர்களுக்கு உதவி செய்வது என செயல் வீரராக அறியப்படுகிறார் அப்போதைய தலைவர் விஜயகாந்த். அவரை பற்றி நன்கு அறிந்தவர்கள் அவரை தற்போது பார்த்தல் கண்கலங்கி விடுவார்கள்.

 

அப்படி ஒரு பத்திரிக்கையாளர், அண்மையில் வெளியிட்ட செய்திக்குறிப்பில், விஜயகாந்த் பற்றி குறிப்பிட்டார். அதாவது, நடிகர் சங்கம் நிதியுதவிக்காக மலேசியா சிங்கப்பூரில், கலை நிகழ்ச்சி நடத்த வேண்டியுள்ளது

இதையும் படியுங்களேன் – அதெல்லாம் நம்பாதீங்க., நான் சொல்றது தான் நிஜம்.! சூர்யா கொடுத்த வாக்குமூலம்.!

 

அதற்காக அழைப்பிதழ் கொண்டு முதலில் கமல் வீட்டுக்கு சென்றுவிட்டார். அடுத்து ரஜினி வீட்டிற்கு கொண்டு சென்று, அவர் வீட்டில் தரையில் அமர்ந்து அண்ணே நீங்க கண்டிப்பாக வரவேண்டும் மறுக்க கூடாது என கூறியுள்ளார். தரையில் அமர்ந்து இவ்வாறு விஜயகாந்த் செய்ததும் பதறிப்போன, ரஜினி விஜி நான் கண்டிப்பா வரேன் நீ முதல்ல எழுந்திரு என கூறி ஆசுவாசப்படுத்தியுள்ளர் சூப்பர் ஸ்டார் விஜயகாந்த்.

Published by
Manikandan