தமிழ் சினிமாவில் மக்களுக்காக இருந்த பிரபலங்களில் எம்.ஜி.ஆருக்கு பின்னர் விஜயகாந்த் தான். அவர் நடிப்பை தன் தொழிலாக பார்க்கவில்லை. அவர் சம்பாரிக்கும் பணத்தினை தனக்காக வைத்து கொள்ளாமல் மக்களுக்காக செய்வதில்லையே கவனம் செலுத்தினார். ஆனால் அவர் தற்போது உடல்நல குறைவில் இருப்பதற்கு காரணம் அரசியலும் இந்த சோஷியல் மீடியாவும் தான் காரணம் என்கிறார் எழுத்தாளர் அன்பராமி.
அவர் அளித்துள்ள பேட்டியில், நாங்கள் மிகவும் கஷ்டப்பட்ட காலத்தில் எங்கள் வயிறு நிரம்ப உணவளித்தது விஜயகாந்த் தான். கோயம்பேட்டில் இருக்கும் மண்டபத்தில் மதிய உணவு கொடுப்பார்கள். பிரசாதம் கூட அளவாக தான் தருவார்கள். ஆனால் இங்கு நமக்கு பசி அடங்கும் வரை முகம் சுளிக்காமல் கொடுத்துக்கொண்டே இருப்பார்கள்.
இதையும் படிங்க : இவருக்காக தன் கொள்கையே மாற்றிய ரஜினிகாந்த்! பாலசந்தரை விட இவர் ஒசத்தியா?
அப்படி இருக்கும் விஜயகாந்த் அரசியலுக்கு வந்த போது அனைவருக்குமே அது சரியாகவே பட்டது. தமிழகத்தின் ஆளுமை கட்சிகளை எதிர்க்க அவருக்கு மட்டுமே தைரியம் இருந்தது. ஆனால் சமூக வலைத்தளம் தான் அவரை ட்ரோல் மெட்டிரியலாக மாற்றியது. அவர் பேசிய அனைத்தையுமே கேலி பேசியது இந்த மீடியாக்கள் தான்.
அவர் ஆளுமைகளை எதிர்த்து நின்ற போது அவருக்கு துணையாக யாரும் இல்லை. இன்று அவரின் மனைவியையும், மச்சனுரையுமே குறை சொல்கிறார்கள். பெரிய ஆளுமைகள் இருந்த போது விஜயகாந்தினை தேடி வராதவர்கள், இன்று அவரை பார்க்க விடவில்லை என்று குறை சொல்லுவது எந்தவிதத்தில் நியாயம் என்று தெரியவில்லை.
இதையும் படிங்க : ‘லியோ’வில் ரோலக்ஸா? புதைந்திருந்த ரகசியத்தை கசியவிட்ட த்ரிஷா! அப்போ lcu கன்ஃபார்ம்
விஜயகாந்திடம் எந்தவித போலித்தனமும் இல்லை. விஜயகாந்த் தான் அதிக புதிய இயக்குனர்களுக்கு வாய்ப்பு கொடுத்தார். தனக்கு எதிரான கேலிகளை எல்லாம் தட்டிவிட்டு புரட்சி படங்களில் நடித்தவர் விஜயகாந்த் தான். அவரை தொடர்ந்தே பல நடிகர்களும் அப்படிப்பட்ட படங்களில் நடித்தனர். அவர் மூலமாக சினிமாவில் நடித்தவர்கள் தான்.
பல முன்னணி பாடகர்களின் குரலுக்கு விஜயகாந்த் தான் பொருத்தமாக இருந்தார். தன்னுடைய படங்களால் பல தலைமுறையை ஈர்த்தவர் தான் விஜயகாந்த். அவருக்கு முன்னால் நம் சமூகம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.
இளையராஜா 'இசைஞானி'…
இந்தியா முழுவதும்…
தனுஷ் இயக்கத்தில்…
ஆர்.ஜே பாலாஜி…
இயக்குனர் அட்லீ…