Vijayakanth: மதுரையிலிருந்து நாமும் பெரிய நடிகராக வேண்டும் என்கிற ஆசையில் சென்னைக்கு வந்து வாய்ப்பு தேடியவர் விஜயகாந்த். பல அவமானங்களுக்கு பின் அவருக்கு வாய்ப்புகள் கிடைத்தது. சில படங்களில் நடித்தாலும் அவர் கவனிக்கப்படவில்லை. எஸ்.ஏ.சந்திரசேகரின் ‘சட்டம் ஒரு இருட்டறை’ படத்தின் வெற்றி அவரை பிரபலமாக்கியது.
ஒருகட்டத்தில் ரஜினி, கமல் போன்ற பெரிய நடிகர்களுக்கு டஃப் கொடுக்கும் அளவுக்கு மாறினார். சில ரஜினி, கமல் படங்களை விட விஜயகாந்தின் படங்கள் அதிக வசூலையும் பெற்றது. விஜயகாந்த் நடிகர் என்பதை தாண்டி மனிதாபிமானம் மிக்க ஒரு நல்ல மனிதராகத்தான் பலராலும் நினைவுகூறப்படுகிறார்.
இதையும் படிங்க: விஜயகாந்த் இறங்கி வருவார்.. விஜய் கார் கண்ணாடி ஏத்திட்டு போயிடுவார்!.. பத்திரிக்கையாளர் பேட்டி..
விஜயகாந்த் நடிகர் சங்க தலைவராக இருந்தபோது எல்லா நடிகர்களையும் வைத்து மதுரையில் ஒரு கலை நிகழ்ச்சி நடத்தினார். நிகழ்ச்சிமுடிந்து எல்லோரும் ரயிலில் ஏறியபோது இரவு உணவை எடுத்துவைக்காமல் விட்டுவிட்டனர். சாப்பாடு எடுத்துவைக்கவில்லை என தெரிந்ததும் விஜயகாந்தும் வண்டியில் ஏறிவிட்டார்.
பாக்கெட் இல்லாத பனியன் மற்றும் லுங்கி மட்டுமே அணிந்திருந்தார். அருகில் இருந்தவர்களின் உங்களிடம் எவ்வளவு பணம் இருக்கிறது என கேட்க, எல்லோருக்கும் சாப்பாடு கொடுக்கவுளவுக்கு பணம் இல்லை. எனவே, செல்லும் வழியில் தன்னுடைய ரசிகர் மன்றத்தை சேர்ந்த ஒருவன் இருக்கிறான். அவன் உதவி செய்வான் என நினைத்த விஜயகாந்த் டி.டி.ஆரிடம் ஒரு இடத்தில் வண்டியை 10 நிமிடம் நிறுத்த சொல்லியிருக்கிறார். அவரோ வட இந்தியாவை சேர்ந்தவர். முடியாது என மறுக்கிறார்.
இதையும் படிங்க: நாள் முழுக்க மரத்து மேல உட்காந்திருந்த விஜயகாந்த்!. சண்டைன்னு வந்துட்டா அண்ணன் கில்லிதான்!..
அங்கிருந்த தியாகு, சந்திரசேகர் அனைவரும் ‘நீ போடா நாங்க பாத்துக்குறோம்’ என சொல்ல ரயில் நின்றதும் அருகில் இருந்த சிலரை அழைத்துக்கொண்டு இருட்டில் ஒத்தயடி பாதையில் நடந்து போயிருக்கிறார். அங்கே ஒரு கடை இருந்தது. ஆனால், இரவு 11 மணி என்பதால் கடையை மூடும் நேரம்,.
கடையில் உள்ளே போன விஜயகாந்த் ‘கடையில் என்ன இருக்கிறது’ என கேட்க, விஜயகாந்தை பார்த்த அவருக்கு கையும் ஓடவில்லை. காலும் ஓடவில்லை., பின் சுதாரித்துக்கொண்டு கடையில் இருந்த பரோட்டா மற்றும் குருமாவை கட்டி கொடுத்திருக்கிறார். இப்போது என்னிடம் பணம் இல்லை நாளை காலை என் ரசிகர் மன்றத்தை சேர்ந்த ஒருவன் உங்களுக்கு பணம் கொடுப்பான்’ என விஜயகாந்த் சொல்ல அந்த கடைக்காரர் ‘பரவாயில்லை தம்பி’ என கையெடுத்து கும்பிட்டாராம். அதை எடுத்துக்கொண்டு ரயில் நிலையத்திற்கு வந்துள்ளார் விஜயகாந்த்.
அங்கே ரயிலை எடுக்கவிடாமல் தியாகுவும், சந்திரசேகரும் தண்டவாளத்தில் தலைவைத்து படுத்திருந்தார்களாம். அவர்களை எழுப்பி அனைவரும் ரயிலில் ஏறி பின்னர் ரயில் புறப்பட்டுள்ளது. வாங்கி வந்த பரோட்டாக்களை வைத்து ரயிலில் இருந்த நடிகர், நடிகைகளின் பசியை போக்கியுள்ளார் விஜயகாந்த். இந்த தகவலை இந்த சம்பவம் நடந்தபோது விஜயகாந்துடன் இருந்த செய்தியாளர் ஒருவர் ஊடகம் ஒன்றில் பகிர்ந்து கொண்டார்.
இதையும் படிங்க: 4 பேர் அரிவாளுடன் துரத்தினாங்க! படப்பிடிப்பில் இருந்த விஜயகாந்த் செய்த முதல் வேலை – நிஜ ஹீரோப்பா