விஜயகாந்த் நினைவிடத்திற்கு உலக சாதனை விருது! ஏன்னு தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க

Actor Vijayakanth: தமிழ் சினிமாவில் எம்ஜிஆருக்கு அடுத்தபடியாக வள்ளல் தன்மை கொண்ட நடிகராக விளங்கியவர் நடிகரும் கேப்டனுமான விஜயகாந்த். ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்ற ஒரு மனிதராகவும் அரசியலில் ஒரு நல்ல தலைவராகவும் புகழ்பெற்று வந்தவர் விஜயகாந்த்.

சினிமாவிலும் சரி அரசியலிலும் சரி முழு ஆதிக்கம் பெற்ற ஒரு மனிதராகவே இருந்து வந்தார். தன்னைவிட தன்னை சுற்றி இருப்பவர்கள் எப்பொழுதுமே நலமாக இருக்க வேண்டும் என்பதை தன் மனதில் கொண்டவர். பசி என வருவோருக்கு வயிறார சாப்பாடு போட்டு அழகு பார்ப்பவர்.

இதையும் படிங்க: விஜய் சாங் உட்பட இதெல்லாம் இவர் பாடியதா? வாய்ப்பு இல்லாமல் அவருடைய பரிதாப நிலை

இவரால் எத்தனையோ பல உள்ளங்கள் நன்மை அடைந்து இருக்கின்றனர். கிட்டத்தட்ட இவரை குட்டி எம்ஜிஆர் என்றே அந்த காலத்தில் அழைத்து வந்தார்கள். அதற்கேற்ற வகையில் விஜயகாந்த், எம்ஜிஆரின் தீவிர ரசிகராகவும் அவரின் கொள்கைகளை முழுவதுமாக பின்பற்றுபவராகவும் இருந்து வந்தார்.

இந்த நிலையில் விஜயகாந்தின் மறைவு திரையுலகினர் மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த தமிழக ரசிகர்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இருந்தாலும் அவர் இறந்ததிலிருந்து இன்று வரை அவருடைய நினைவிடத்தில் நாள்தோறும் அன்னதானம் வழங்கப்பட்டு வருகின்றது. வெளியூர்களிலிருந்து சென்னைக்கு வருபவர்கள் எம்ஜிஆர், கருணாநிதி, ஜெயலலிதா இவர்களின் நினைவிடங்களை பார்க்கப் போகிறார்களோ இல்லையோ விஜயகாந்த் நினைவிடத்திற்கு வந்து அவருடைய ஆசீர்வாதங்களை பெற்று செல்கிறார்கள்.

இதையும் படிங்க: ஒரே சீன் வேறு வேறு எபிசோட்… டைரக்டர் சார் நீங்க ஜவ்வா இழுக்குறீங்க தெரிதா?

இந்த நிலையில் பிரபல நிறுவனமான லிங்கன் புக் ஆப் ரெக்கார்ட்ஸ் சார்பில் மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த் நினைவிடத்திற்கு உலக சாதனை விருது கிடைத்திருக்கிறது. தொடர்ந்து உணவு வழங்கும் உலகின் முதல் நினைவிடமாக விஜயகாந்த் நினைவிடம் கருதப்படுவதாக இந்த நிறுவனம் பாராட்டை தெரிவித்து இருக்கிறது. மேலும் கடந்த 125 நாட்களில் கிட்டத்தட்ட 15 லட்சத்திற்கும் மேற்பட்டோர் இவருடைய நினைவிடத்திற்கு வந்து அஞ்சலி செலுத்தி விட்டு சென்றிருக்கின்றனர்.

 

Related Articles

Next Story