சிவாஜி - விஜயகாந்த் இணைந்து நடிக்கவிருந்த படம்.. ஆனா நடிச்சது அந்த ஹீரோ!.. ஜஸ்ட் மிஸ்!...

தமிழ் சினிவில் சில காம்பினேஷன் அமைவது மிகவும் கடினம். சிலருக்கு மட்டுமே அது வாய்க்கும். நடிகர் திலகத்தின் தீவிர ரசிகராக கமல்ஹாசன் இருந்தும் அவருடன் ஒரு நல்ல கதாபாத்திரத்தில் நடிக்கும் வாய்ப்பு தேவர் மகன் படத்தில்தான் கிடைத்தது. இப்போது வரை அந்த படம் பலராலும் பேசப்படுகிறது.

ஆனால், சிவாஜியின் அதிக படங்களில் நடிக்கும் வாய்ப்பு ரஜினிக்கு கிடைத்தது. விடுதலை, படிக்காதவன், படையப்பா ஆகிய படங்களில் சிவாஜியுடன் ரஜினி நடித்தார். அதேபோல், எம்.ஜி.ஆருடன் சேர்ந்து நடிக்கும் வாய்ப்பு யாருக்கும் கிடைக்கவில்லை. அதற்கு காரணம் அரசியலுக்கு சென்றபின் அவர் திரைப்படங்களில் நடிப்பதை குறைத்துக்கொண்டார்.

இதையும் படிங்க: கமலை பார்த்து டென்ஷன் ஆன விஜயகாந்த்… எதுக்குன்னு தெரியுமா? அந்த குணா என்ன சொல்றார்னு பாருங்க…

ஆனால், ஜெய்சங்கர் போன்ற நடிகர்களுடன் ரஜினி, கமல் போன்றோர் நிறைய படங்களில் நடித்தார்கள். ஆனால், விஜயகாந்துக்கு யாருடனும் இணைந்து நடிக்கும் வாய்ப்பு கிடைக்கவே இல்லை. கடைசிவரை ஒன் மேன் ஷோவாகவே நடித்துவிட்டு போய்விட்டார். சிவாஜியுடன் வீர்பாண்டியன் என்கிற படத்தில் மட்டும் நடித்திருந்தார்.

நடிகர் திலகம் சிவாஜியும் முடிந்தவரை இளம் நடிகர்களின் படங்களில் நடித்திருக்கிறார். என் ஆசை ராசாவே என்கிற படத்தில் முரளியுடன் நடித்தார். பூப்பறிக்க வருகிறோம் என்கிற படத்தில் நடிகர் விஷாலின் அண்ணன் விக்ரம் கிருஷ்ணன் சிவாஜியுடன் நடித்திருந்தார்.

இதையும் படிங்க: யோவ் யாருய்யா நீங்க? கமல் செஞ்ச உதவி.. வாயடைத்து நின்ற விஜயகாந்த்! கேப்டனுக்கே டஃப் கொடுத்தாரா

90களில் குடும்ப பிரச்சனைகளை அலசி படமெடுக்கும் இயக்குனர் வி.சேகர் ஒரு கதை எழுதி இருந்தார். அது மாமனாருக்கும், மருமகனுக்கும் இடையே இருக்கும் பாசப்பிணைப்பு சம்பந்தப்பட்ட கதை. இதில், சிவாஜியும், கேப்டன் விஜயகாந்தும் இனைந்து நடிப்பதாக இருந்தது.

ஆனால், உடல்நிலை காரணமாக சிவாஜி அப்படத்தில் நடிக்கவில்லை. அதனால், விஜயகாந்தும் அப்படத்தில் நடிக்கவில்லை. எனவே, ஜனகராஜும், நிழல்கள் ரவி ஆகியோர் அப்படத்தில் நடித்திருந்தனர். இதனால் சிவாஜியுடன் மீண்டும் நடிக்கும் வாய்ப்பு விஜயகாந்துக்கு கிடைக்காமல் போனது.

 

Related Articles

Next Story