விஜயகாந்திடம் இந்த விஷயத்துல மட்டும் தப்பிக்கவே முடியாது....!மாட்டிக்கிட்டு முழித்த பிரபல நடிகர்....

by Rohini |
vijay_main_cine
X

தமிழ் சினிமாவில் பெருமைக்கு சொந்தக்காரராக திகழப்படும் நடிகர் விஜயகாந்த். கேப்டன், புரட்சிக்கலைஞர் என்றெல்லாம் செல்லமாக அழைக்கப்படும் நம்ம விஜயகாந்த் கிட்டத்தட்ட 150க்கும் படங்களுக்கும் மேல் நடித்திருக்கிறார். மேலும் பெரும்பாலான முன்னனி நடிகர்களுக்கெல்லாம் முன்னோடியாகவும் இருந்துள்ளார்.

vijay1_cine

அவர் திரும்பவும் பழைய நிலைமைக்கு வந்து விடமாட்டாரா என ஏராளமான நடிகர்கள் ஏங்கிக் கொண்டிருக்கின்றனர். அண்மையில் தான் விஜயகாந்தின் பிறந்த நாள் முடிந்தது. அதற்காக சினிமா நட்சத்திரங்கள் பலரும் தங்களுடைய வாழ்த்துக்களை கூறினர்.

இதையும் படிங்கள் : மச்சானை நம்பி மலையேறிய அருண் விஜய்.! அதிர்ச்சியில் உறைந்து போன தயாரிப்பாளர்கள்.!

vijay2_cine

மேலும் விஜயகாந்துடன் ஏற்பட்ட பழைய நல்ல அனுபவங்களையும் பகிர்ந்தனர். அந்த வகையில் பிரபல குணச்சித்திர நடிகரும் டப்பிங் நடிகருமான எம்.எஸ்.பாஸ்கர் தன்னுடைய ஒரு சம்பவத்தை கூறி விஜயகாந்தை பெருமைபடுத்தினார். விஜயகாந்துடன் தர்மபுரி என்ற படத்தில் நடித்திருக்கிறாராம் எம்.எஸ்.பாஸ்கர்.

vijay3_cine

இதையும் படிங்கள் : சூர்யாவுக்கு சினிமா ஒன்னும் தராது…! அவனுக்கு அடையாளமே இது தான்…சிவக்குமாரின் ஆக்ரோஷமான பேச்சு…

அந்த படத்தின் படப்பிடிப்பு சமயத்தில் சாப்பாட்டு வேளையில் சாப்பிட்டுக் கொண்டிருக்கும் போது எம்.எஸ். பாஸ்கர் தனியாக உட்கார்ந்து சாப்பிட்டுக் கொண்டிருக்க அதை பார்த்த விஜயகாந்த் பாஸ்கரை அழைத்தாராம். அப்பவே பாஸ்கர் பயந்தாராம் ஐய்யய்யோ இவர் பக்கத்தில் எப்படி உட்கார என நினைத்துக் கொண்டே போக விஜயகாந்த் பக்கத்தில் உட்கார வைத்து கரண்டி நிறைய ஆட்டுக்கறியை போட்டு சாப்பிட வைத்தாராம். சாப்பாடு விஷயத்தில் மட்டும் விஜயகாந்திடம் இருந்து தப்பிக்கவே முடியாது. சொன்னால் நம்ப மாட்டீங்க இந்த ஒரு படத்திலயே எனக்கு 8 கிலோ எடை கூடியது என பாஸ்கர் தெரிவித்தார்.

Next Story