விஜயகாந்த் பத்தி பொய் நியூஸ் சொல்லியே கொன்னுட்டீங்களேடா!.. மன அழுத்தத்தால் இறந்த ரசிகர்…

Published on: December 8, 2023
vijayakanth
---Advertisement---

Vijakanth: சினிமாவில் சில நடிகர்களுக்கு வெறித்தனமான ரசிகர்கள் இருப்பார்கள். தான் விரும்பும் நடிகருக்காக உயிரை கூட கொடுப்பார்கள். தன் தலைவனுக்கு ஒன்றென்றால் எந்த எல்லைக்கும் போவார்கள். எம்.ஜி.ஆர் காலத்தில் இருந்து இது இருக்கிறது. அடுத்தது ரஜினிக்கு அது போல ரசிகர்கள் இருக்கிறார்கள்.

ரஜினிக்கு பின் விஜயகாந்துக்கு மட்டுமே அப்படி ரசிகர்கள் உருவானார்கள்.. இன்னும் சொல்லப்போனால் கிராமப்புறங்களில் விஜயகாந்துக்குதான் அதிக ரசிகர்கள் எப்போதும் உண்டு. கடந்த சில வருடங்களாக விஜயகாந்த் உடல் நலம் பாதிக்கப்பட்டு சினிமா மற்றும் அரசியல் என இரண்டிலிருந்தும் ஒதுங்கி இருக்கிறார்.

இதையும் படிங்க: காசுக்காக அசிங்கமா பேசுவியா..? உனக்கு முதல ஒழுங்கா நடக்க தெரியுமா..? பயில்வானை வெளுத்துவிட்ட பப்லு பிரித்விராஜ்..!

அவரால் எழுந்து நிற்கவோ, பேசவோ முடியாத நிலையிலும், தன்னை சுற்றி என்ன நடக்கிறது என்பதை கூட அறியாதவராக இருக்கிறார். சமீபத்தில் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அதையடுத்து, அவரின் உடல்நிலை பற்றி பல தவறான செய்திகள் பரவியது. ஆனால், அவர் நன்றாக இருக்கிறார். தேவையில்லாத வதந்திகளை பரப்பாதீர்கள் என பிரேமலதா கூறினார். ஆனாலும், வதந்திகள் நிற்கவில்லை.

இந்நிலையில், அவரின் தீவிர ரசிகர் மற்றும் விஜயகாந்தின் எங்கள் ஆசான், சகாப்தம், விருதகிரி ஆகிய படங்களில் வசனம் எழுதிய ஆர்.வேலுமணி நேற்று மரணமடைந்தார். விஜயகாந்த் உடல் நிலைபற்றி வெளியான செய்திகளில் அவர் மரணமடைந்ததாக சொல்லப்பட்டது. இவர் விஜயகாந்த் குடும்பத்துடன் நெருங்கி பழகி வந்தவர். விஜயகாந்த் மீது அளவுக்கடந்த அன்பு வைத்திருந்தவர்.

இதையும் படிங்க: விஜய் டிவியின் அடுத்த ஸ்டார் ஜோடி..! கண்ணே கலைமானே சீரியல் நடிகைக்கு இந்த நடிகருடன் திருமணமா?

நடந்தது என்னவெனில், விஜயகாந்த் உடல்நிலை பற்றி எதிர்மறையாக பலரும் அவரை தொடர்பு கொண்ட பேசியுள்ளனர். விஜயகாந்த் மீது தீவிர அன்பு வைத்திருக்கும் அவருக்கு இது மன அழுத்தத்தை ஏற்படுத்தி அதனால் மாரடைப்பு ஏற்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. ஊடகங்களும், பொய் செய்திகளை பரப்பும் நபர்களாலும் ஒரு உயிரே பறிபோயுள்ளது.

vijayakanth

இதனால்தான் விஜயகாந்தின் மனைவி பிரேமலதா நேற்று செய்தியாளர் சந்திப்பில் ‘ஏன் இப்படி பொய் செய்திகளை பரப்புகிறீர்கள்?’ என கண்ணீர் விட்டு அழுதார். ஆர்.வேலுமணி திருமணம் செய்து கொள்ளவில்லை. வயதான அம்மாவுடன் வசித்து வந்தார். இப்போது அவரின் அம்மா ஆதரவில்லாமல் நிற்கிறார். அவருக்கு விஜயகாந்த் தரப்பில் நிதியுதவியும் அளிக்கப்பட்டுள்ளது.

என்ன உதவிகள் கிடைத்தாலும் மகன் கூட இருப்பது போல் அவருக்கு வருமா?..

இதையும் படிங்க: அவர் சுயம்பு! விதை போடல இன்னும்! CM ஆவது உறுதி – அஜித்தை பற்றி இந்தளவுக்கு பேசிய பிரபலம்

சிவா

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.