Connect with us

Cinema History

குறைந்த பட்ஜெட்!.. ஆனா பல கோடி லாபம்!.. விஜயகாந்த் படங்களின் லிஸ்ட் இதோ!..

குறைந்த செலவில் எடுக்கப்படும் படங்களும் அதிக வசூலை செய்தன என்றால் நாம் கண்ணை மூடிக்கொண்டு கேப்டனின் படங்களைப் பட்டியலிடலாம். என்னென்ன என்று பார்க்கலாமா…

கோயில் காளை

1994ல் ஆர்.சுந்தரராஜன் இயக்கிய படம் என் ஆசை மச்சான். விஜயகாந்த், முரளி, ரேவதி, ரஞ்சிதா உள்பட பலர் நடித்துள்ளனர். 3.55 கோடி தான் பட்ஜெட். ஆனால் வசூல் 16 கோடி.

1993ல் வந்த படம் கோயில் காளை. கங்கை அமரன் இயக்கத்தில் இளையராஜா இசை அமைத்துள்ளார். இது இருவரும் சேர்ந்து தயாரித்த படம். விஜயகாந்த், கனகா, கவுண்டமணி உள்பட பலர் நடித்துள்ளனர். இந்தப் படம் 3.50 கோடி பட்ஜெட். ஆனால் இதன் வசூலோ 17 கோடி.

1999ல் பாரதிகணேஷ் இயக்கத்தில் வந்த படம் கண்ணுபட போகுதய்யா. விஜயகாந்த், சிம்ரன், கரன், சிவகுமார் உள்பட பலர் நடித்துள்ளனர். விஜயகாந்த் அப்பா, மகன் என இரு வேடங்களில் நடித்துள்ளார். 4.60 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்டு 20 கோடியை வசூலித்தது.

கேப்டன் பிரபாகரன்

1991ல் ஆர்.கே.செல்வமணியின் இயக்கத்தில் விஜயகாந்த் நடித்த 100வது படம் கேப்டன் பிரபாகரன். அவருடன் இணைந்து ரம்யா கிருஷ்ணன், மன்சூர் அலிகான், லிவிங்ஸ்டன், சரத்குமார் உள்பட பலர் நடித்துள்ளனர். 3.50 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இந்தப் படம் 18.25கோடியை வசூலித்தது.

2000ல் ரிலீஸான படம் வல்லரசு. என்.மகாராஜன் இயக்கத்தில் தேவா இசை அமைத்துள்ளார். விஜயகாந்த் நடித்த அதிரடி ஆக்ஷன் படம். 5 கோடியில் தயாரான இந்தப் படம் 47 கோடியை வசூலித்தது.

Chinnakavundar

Chinnakavundar

1992ல் ஆர்.வி.உதயகுமார் இயக்கத்தில் வெளியான படம் சின்னக்கவுண்டர். விஜயகாந்த், சுகன்யா, மனோரமா, கவுண்டமணி, செந்தில் உள்பட பலர் நடித்துள்ளனர். இந்தப் படம் விஜயகாந்த் கேரியரிலேயே மிக முக்கியமான வெற்றிப் படம். 3.50 கோடி பட்ஜெட்டில் 22 கோடியை வசூலித்தது.

தவசி

2001ல் ரிலீஸான இந்தப் படத்தை கே.ஆர்.உதயசங்கர் இயக்கினார். விஜயகாந்த் இரட்டை வேடம். சௌந்தர்யா, வடிவேலு, நாசர் உள்பட பலர் நடித்துள்ளனர். 6 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இந்தப் படம் 29 கோடியை வசூலித்தது. 2004ல் வெளியான படம் எங்கள் அண்ணா. இயக்குனர் சித்திக். விஜயகாந்த், பிரபுதேவா, பாண்டியராஜன், வடிவேலு உள்பட பலர் நடித்துள்ளனர். விஜயகாந்த் தயாரிப்பு. 7 கோடி பட்ஜெட். வசூல் 32 கோடி.

ரமணா

Ramana

Ramana

2000ல் விக்ரமன் இயக்கத்தில் வெளியான படம் வானத்தைப் போல. விஜயகாந்த் இரட்டை வேடம். மீனா, பிரபுதேவா, லிவிங்ஸ்டன், கௌசல்யா உள்பட பலர் நடித்துள்ளனர். 6 கோடி செலவில் எடுக்கப்பட்ட படம் 45 கோடியை வசூலித்தது. 2002ல் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் வெளியான படம் ரமணா. தமிழக அரசின் சிறந்த படத்திற்கான விருது பெற்ற படம் இது. 7.50 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இந்தப் படம் 42 கோடியை வசூலித்தது.

 

 

google news
Continue Reading

More in Cinema History

To Top