Connect with us
vijayakanth

Cinema History

விஜயகாந்த் படங்களுடன் மோதிய டாப் நடிகர்கள்!.. அட இவ்வளவு இருக்கா?!…

கேப்டன் விஜயகாந்த் படங்கள் என்றாலே கிராமத்து ரசிகர்களுக்கு அது கொண்டாட்டம் தான். அவரது தனித்துவமான ஸ்டைலான நடிப்பும், வசன உச்சரிப்பும், லெக் ஃபைட்டும் அவருக்கே உரியது.

அவர் படங்கள் ரிலீஸாகும் போது உடன் எவ்வளவு பெரிய நடிகர்களின் படங்கள் வந்தாலும் பின்வாங்க மாட்டார். இவரது படங்களுடன் கார்த்திக், ரஜினி, கமல், சரத்குமார், அர்ஜூன், பிரபு, ராமராஜன், மோகன், அஜீத், விஜய் என அனைத்து நடிகர்களின் படங்களும் போட்டி போட்டு வந்துள்ளன. அவற்றில் ஒரு சிலவற்றைப் பார்க்கலாம்.

விஜயகாந்த் – கார்த்திக் படங்கள்

1982 மே மாதம் கார்த்திக்கின் கேள்வியும் நானே பதிலும் நானே படமும், விஜயகாந்தின் சிவந்த கண்கள் படமும் ஒரே நாளில் வெளியானது. 1985 பொங்கலுக்கு விஜயகாந்தின் அலை ஓசையும், கார்த்திக்கின் நல்ல தம்பி படமும் வெளியானது. 1985 ஜூலை மாதம் விஜயகாந்தின் தண்டனை படமும், கார்த்திக்கின் அவள் சுமங்கலிதான் படமும் வெளியானது.

1985ல் செப்டம்பர் மாதம் விஜயகாந்தின் நீதியின் மறுபக்கம் படமும், கார்த்திக்கின் அர்த்தமுள்ள ஆசைகள் படமும் வெளியானது. 1992 ஜனவரியில் சின்னக்கவுண்டர் படமும், கார்த்திக்கின் அமரன் படமும் வெளியானது. 2000 தமிழ்ப்புத்தாண்டுக்கு விஜயகாந்தின் வல்லரசு படமும், கார்த்திக்கின் சந்தித்த வேளை படமும் வெளியானது.

விஜயகாந்த் – ராமராஜன் படங்கள்

1987 தமிழ்ப்புத்தாண்டுக்கு விஜயகாந்தின் வீரபாண்டியன் படமும், ராமராஜனின் எங்க ஊரு பாட்டுக்காரன் படமும் வெளியானது. 1988 பொங்கலுக்கு விஜயகாந்தின் காலையும் நீயே மாலையும் நீயே படமும், ராமராஜனின் செண்பகமே செண்பகமே படமும் வெளியானது. 1989 தீபாவளிக்கு விஜயகாந்தின் தர்மம் வெல்லும், ராஜநடை படங்களும், ராமராஜனின் அன்புக்கட்டளை, தங்கமான ராசா படமும் வெளியானது.

விஜயகாந்த் – சரத்குமார் படங்கள்

1988 தமிழ்ப்புத்தாண்டுக்கு விஜயகாந்தின் உள்ளத்தில் நல்ல உள்ளம் படமும், சரத்குமாரின் கண் சிமிட்டும் நேரம் படமும் வெளியானது. 1990 செப்டம்பரில் விஜயகாந்தின் எங்கிட்ட மோதாதே படமும், சரத்குமாரின் பாலைவன பறவைகள் படமும் வெளியானது.

1994 நவம்பரில் விஜயகாந்தின் பெரிய மருது படமும், சரத்குமாரின் நாட்டாமை படமும் வெளியானது. 2002 ஜூனில் விஜயகாந்தின் தேவன் படமும், சரத்குமாரின் தென்காசிப்பட்டணமும் வெளியானது. 2003 ஆகஸ்டில் விஜயகாந்தின் தென்னவன் படமும், சரத்குமாரின் திவான் படமும் வெளியானது. 2006 அக்டோபரில் விஜயகாந்தின் தர்மபுரி படமும், சரத்குமாரின் தலைமகன் படமும் வெளியானது.

விஜயகாந்த் – பிரபு படங்கள்

V P

V P

1983 ஜனவரியில் விஜயகாந்துக்கு நான் சூட்டிய மலர் படமும், பிரபுவுக்கு நீதிபதி படமும் வெளியானது. 1986 நவம்பரில் விஜயகாந்தின் தழுவாத கைகள், தர்மதேவதை படங்களும், பிரபுவுக்கு அறுவடை நாள், பாலைவன ரோஜாக்கள் படங்களும் வெளியாயின.

1988 ஜூலையில் விஜயகாந்தின் தம்பி தங்க கம்பி படமும், பிரபுவின் என் தங்கச்சி படிச்சவ படமும் வெளியானது. 1991 தமிழ்ப்புத்தாண்டுக்கு விஜயகாந்தின் கேப்டன் பிரபாகரன் படமும், பிரபுவின் சின்னதம்பி படமும் வெளியானது.

1993 பொங்கலுக்கு விஜயகாந்தின் கோயில் காளையும், பிரபுவின் சின்ன மாப்ளேயும் ரிலீஸ். 1998 தீபாவளிக்கு விஜயகாந்தின் வீரம் வெளைஞ்ச மண்ணு படமும், பிரபுவின் என் உயிர் நீதானே படமும் ரிலீஸ். 2000 பொங்கலுக்கு விஜயகாந்தின் வானத்தைப் போல படமும், பிரபுவின் திருநெல்வேலி படமும் ரிலீஸ்.

விஜயகாந்த் – மோகன் படங்கள்

1984 ஜூலையில் விஜயகாந்தின் சபாஷ் படமும், மோகனின் 24 மணி நேரம் படமும் வெளியானது. 1984 தீபாளிக்கு விஜயகாந்தின் வைதேகி காத்திருந்தாள் படமும், மோகனின் ஓ மானே மானே படமும் ரிலீஸ். 1986ல் விஜயகாந்தின் கரிமேடு கருவாயன் படமும், மோகனின் டிசம்பர் பூக்கள் படமும் ரிலீஸ். 1985 தமிழ்ப்புத்தாண்டுக்கு விஜயகாந்தின் ராமன் ஸ்ரீராமன் படமும், மோகனின் உதயகீதம் படமும் வெளியானது.

விஜயகாந்த் – கமல் படங்கள்

VK K

VK K

1981 ஆகஸ்டில் விஜயகாந்தின் சிவப்பு மல்லி படமும், கமலின் சங்கர்லால் படமும் வெளியானது. 1982 பிப்ரவரியில் விஜயகாந்தின் பார்வையின் மறுபக்கம் படமும், கமலின் மூன்றாம்பிறை படமும் ரிலீஸ். 1984 தீபாளிக்கு விஜயகாந்தின் வைதேகி காத்திருந்தாள் படமும் கமலின் எனக்குள் ஒருவன் படமும் ரிலீஸ்.

1985 பொங்கலுக்கு விஜயகாந்தின் அலை ஓசை படமும், கமலின் ஒரு கைதியின் டைரி படமும் ரிலீஸ். 1985ல் தமிழ்ப்புத்தாண்டுக்கு விஜயகாந்தின் ராமன் ஸ்ரீராமன் படமும், கமலின் காக்கிசட்டையும் ரிலீஸ். 1985 மே மாதம் விஜயகாந்தின் அன்னை பூமியும், கமலின் அந்த ஒரு நிமிடமும் ரிலீஸ். 1987 தீபாவளிக்கு விஜயகாந்தின் சட்டம் ஒரு விளையாட்டு படமும், கமலின் நாயகன் படமும் ரிலீஸ்.

1992 தீபாவளிக்கு விஜயகாந்தின் காவியத்தலைவன் படமும், கமலின் தேவர்மகன் படமும் ரிலீஸ். 1996 தீபாவளிக்கு விஜயகாந்தின் அலெக்சாண்டர் படமும், கமலின் அவ்வை சண்முகியும் ரிலீஸ். 2001 பொங்கலுக்கு விஜயகாந்தின் தவசி படமும், கமலின் ஆளவந்தானும் ரிலீஸ். 2003 பொங்கலுக்கு விஜயகாந்தின் சொக்கத்தங்கம் படமும், கமலின் அன்பே சிவம் படமும் ரிலீஸ். 2004 பொங்கலுக்கு விஜயகாந்தின் எங்கள் அண்ணா, கமலின் விருமாண்டி ரிலீஸ்.

விஜயகாந்த் – விஜய் படங்கள்

VK VJ

VK VJ

1996 பொங்கலுக்கு விஜயகாந்தின் தாயகம் படமும், விஜயின் கோயமுத்தூர் மாப்பிள்ளை படமும் ரிலீஸ். 1997 பொங்கலுக்கு விஜயகாந்தின் தர்மசக்கரம் படமும், விஜயின் காலமெல்லாம் காத்திருப்பேன் படமும் ரிலீஸ். அதே போல 2000ல் வானத்தைப் போல, விஜய்க்கு கண்ணுக்குள் நிலவு, 2001ல் வாஞ்சிநாதன், விஜயின் ப்ரண்ட்ஸ் ரிலீஸ். 2003ல் சொக்கத்தங்கத்துடன் விஜயின் வசீகரா ரிலீஸ்.

விஜயகாந்த் – அஜீத் படங்கள்

1994ல் பெரிய மருதுவும், அஜீத்தின் பவித்ராவும் ரிலீஸ். 1997ல் தர்மசக்கரமும், அஜீத்தின் நேசமும் ரிலீஸ். 1999ல் கள்ளழகரும், அஜீத்தின் உன்னைத்தேடியும் ரிலீஸ். 2002ல் ரமணாவும், அஜீத்தின் வில்லனும் ரிலீஸ்.

விஜயகாந்த் – அர்ஜூன் படங்கள்

1988ல் உள்ளத்தில் நல்ல உள்ளம் படமும், அர்ஜூனின் தாய் மேல் ஆணையும் ரிலீஸ். 1990ல் சந்தனக்காற்றும், அர்ஜூனின் பெரிய இடத்து பிள்ளையும், 1999ல் கண்ணுபடப் போகுதய்யாவும், அர்ஜூனின் முதல்வனும் ரிலீஸ்.

விஜயகாந்த் – ரஜினி படங்கள்

1981ல் சிவப்பு மல்லியும், ரஜினியின் நெற்றிக்கண் படமும் ரிலீஸ். 1984ல் மதுரை சூரன் படமும், ரஜினியின் நான் மகான் அல்ல படமும் ரிலீஸ். 1985ல் ராமன் ஸ்ரீராமனும், ரஜினியின் நான் சிகப்பு மனிதனும், 1988ல் உள்ளத்தில் நல்ல உள்ளம், ரஜினியின் குரு சிஷ்யன் ரிலீஸ். 1990ல் புலன் விசாரணை படமும், ரஜினியின் பணக்காரன் படமும் ரிலீஸ்.

1991ல் மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும் படமும், ரஜினியின் தளபதி படமும் ரிலீஸ். 1994ல் ஆனஸ்ட்ராஜ் படமும், ரஜினியின் வீராவும் ரிலீஸ். 1999ல் பெரியண்ணாவும், ரஜினியின் படையப்பாவும் ரிலீஸ்.

google news
Continue Reading

More in Cinema History

To Top