இப்போ விஜயகாந்த்..? கமல் தப்பினார்.. அடுத்த குறி உங்களுக்கா..? உதயநிதியிடம் பகீர் கிளப்பும் பிரபல இயக்குனர்..!

Published on: December 28, 2023
---Advertisement---

Vijayakanth: தமிழ் சினிமா பிரபலங்கள் முதல் ரசிகர்கள் வரை மிகப்பெரிய துக்கத்தில் இருக்கு நிலையில் தற்போதைய ஒரு செய்தி பலருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. அதுவும் ஒரு பிரபல இயக்குனரின் இன்ஸ்டா போஸ்ட் என்பதால் தான் இது கூடுதல் பரபரப்பையும் ஏற்படுத்தி இருக்கிறது.

பெரிய தலைவர்கள் இறந்தால் அதில் சந்தேகம் இருப்பதாக ஒரு கூட்டம் வரும். இந்த பிரச்னையை அதிகம் சந்தித்தது என்னவோ ஜெயலலிதா தான். அதற்கு ஆணையம் வைத்து விசாரணை எல்லாம் நடைபெற்றது. ஆனால் விஜயகாந்த் இறந்து அவர் உடல் கூட தகனம் செய்யாத நிலையில் பரவி வரும் போஸ்ட் பிரச்னையை உருவாக்கி இருக்கிறது.

இதையும் படிங்க…. 112 டூ 315.. அசைக்க முடியாத சாதனைகளை செய்த மக்கள் இமயம்.. விஜயகாந்தின் சூப்பர்டூப்பர் ஹிட் படங்கள் இத்தனையா?

மலையாள சினிமாவில் மிகப்பெரிய ஹிட்டை கொடுத்தவர் அல்போன்ஸ் புத்திரன். இவர் தொடர்ச்சியாக நல்ல படங்களை கொடுத்து வந்தார். ஆனால் சமீபத்தில் தனக்கு ஆட்டிசம் இருப்பதால் சினிமாவில் இருந்து விலகுகிறேன் என ஓபனாக பதிவிட்டு அனைவரும் அதிர்ச்சியை கொடுத்தார். 

இந்நிலையில் இவரின் அதிகாரப்பூர்வ இன்ஸ்டாவில் இருந்து ஒரு பதிவு வெளியாகி இருக்கிறது. அதில், இது உதயநிதி அண்ணாவுக்கு. நான் கேரளாவில் இருந்து வந்து ரெட் ஜெயண்ட் அலுவலகத்திற்கு வந்து உங்களை அரசியலுக்கு வரச் சொன்னேன். இரும்பு பெண்மணி ஜெயலலிதாவை, கலைஞரை கொலை செய்தது யார் என்று கண்டுபிடிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டேன்.

இப்போது கேப்டன் விஜயகாந்தை கொன்றது யார் என்பதை கண்டுபிடிக்க வேண்டும். இதை நீங்கள் புறக்கணித்தால், அவர்கள் ஏற்கனவே இந்தியன் 2 செட்டில் கமல் சாரையும், முதல்வர் ஸ்டாலினையும் கொல்ல முயற்சித்தார்கள். நீங்கள் இப்போது கொலையாளிகள் பின்னால் செல்லவில்லை என்றால், கொலையாளிகளின் அடுத்த இலக்கு நீங்கள் அல்லது ஸ்டாலின் சாராக தான் இருக்கும்.

இதையும் படிங்க…. விஜயகாந்தின் நிலை திட்டமிட்டு நடந்ததே… அப்போ புரியல.. இப்போ தான் தெரியுது.. பிரபலம் சொன்ன பகீர் தகவல்..!

இதில் உதயநிதியை டேக் செய்து இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. அவர் உடல்நல பிரச்னையால் இப்படியெல்லாம் பேசுகிறாரா? இல்லை அவரின் இன்ஸ்டாகிராம் ஹேக் செய்யப்பட்டு இருக்கிறதா எனத் தெரியவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

Akhilan

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.