Connect with us
Vijayakanth

Cinema News

24 மணி நேரம் ஆனாலும் விஜயகாந்த் இதை விடமாட்டார்… பிரபல தயாரிப்பாளர் ஓப்பன் டாக்…

விஜயகாந்த்தை கேப்டன் என்று செல்லமாக அழைப்பது உண்டு. அதே போல் விஜயகாந்த்தை கருப்பு எம்.ஜி.ஆர் என்று நெகிழ்ச்சியோடு அழைப்பவர்கள் பலர் உண்டு. என்.எஸ்.கிருஷ்ணன், எம்.ஜி.ஆர் ஆகியோரை தொடர்ந்து கொடை வள்ளலாக திகழ்ந்து வந்தவர் விஜயகாந்த்.

Vijayakanth

Vijayakanth

அவரது அலுவலகத்தில் எப்போது போனாலும் சாப்பாடு தயாராகிக்கொண்டே இருக்குமாம். பசி என்று வருபவர்களை வயிறு நிறைய சாப்பிட வைத்து வயிறார அவர்களை திருப்பி அனுப்புவார். அதே போல் உதவி என்று வருபவரை வெறும் கையோடு திரும்ப அனுப்ப மாட்டார் என அவரது நெருங்கிய நண்பர்கள் பலரும் கூறுவர்.

சமத்துவம்

மேலும் அவரது படப்பிடிப்பில், விஜயகாந்த் என்ன வகையான உணவை சாப்பிடுகிறாரோ, அந்த உணவைத்தான் கடை நிலை ஊழியர்களுக்கும் வழங்கப்படும். இவ்வாறு அனைவரிடமும் சமத்துவத்தை பேணி வந்தவர் விஜயகாந்த்.

சோக கதை

விஜயகாந்த் நடிக்க வந்த புதிதில் ஒரு படப்பிடிப்பின்போது ஒரு நாள் விஜயகாந்த் சாப்பிட்டுக்கொண்டிருந்தாராம். அப்போது ஹீரோ படப்பிடிப்பு தளத்திற்குள் நுழைய, அங்கிருந்த ஒருவர் விஜயகாந்த் சாப்பிடுவதை தடுத்து நிறுத்தி, “ஹீரோ வந்துட்டாரு” என கூறி அழைத்துப்போய் விட்டார்களாம்.

இதையும் படிங்க: அஜித்துக்கு ரஜினி ரெக்கமன்ட் செய்த திரைப்படம்… பின்னாளில் மாஸ் ஹிட் ஆன தரமான சம்பவம்… இது தெரியாம போச்சே!!

Vijayakanth

Vijayakanth

“நம்மை சாப்பிடக்கூட விட மாட்டிக்கிறார்களே” என நினைத்த விஜயகாந்த், அதன் பின் தனது ராவுத்தர் பிலிம்ஸ் நிறுவனத்தின் கீழ் உருவாகும் படங்களின் படப்பிடிப்புகளில் அனைவருக்கும் ஒரே சாப்பாடு என்ற முறையை கொண்டுவந்தாராம். இதற்கு பின் இப்படி ஒரு சோக கதையும் இருந்திருக்கிறது.

படப்பிடிப்பில் விஜயகாந்த்

இந்த நிலையில் சமீபத்தில் ஒரு பேட்டியில் கலந்துகொண்ட தயாரிப்பாளரும் நடிகருமான டி.சிவா விஜயகாந்த் குறித்து பல சுவாரஸ்ய தகவல்களை பகிர்ந்துகொண்டார்.

“விஜயகாந்த் தனது வாழ்க்கையில் ஒரு நாள் கூட படப்பிடிப்பிற்கு தாமதமாக வந்ததில்லை. இவர் சீக்கிரம் வந்துவிடுவார் என்பதுதான் அனைவருக்கும் பிரச்சனை. அந்த காலத்தில் எல்லாம் கேரவன் கிடையாது. அவர் ஒரு இடத்தில் உட்காரவும் மாட்டார். படப்பிடிப்பில் கலந்துகொள்ளும் நடிகர், நடிகைகள், ஊழியர்கள் அனைவரையும் கவனித்துக்கொண்டே இருப்பார். அனைவரையும் சாப்பிட்டீங்களா இல்லையா என நலம் விசாரித்துக்கொண்டே இருப்பார்” என அப்பேட்டியில் கூறியிருந்தார்.

Vijayakanth

Vijayakanth

மேலும் பேசிய அவர் “நம்மை வைத்து படம் எடுக்கும் தயாரிப்பாளர் நன்றாக இருக்க வேண்டும் என நினைப்பார் விஜயகாந்த். மாலை 6 மணிக்கும் மேல் படப்பிடிப்பு நீண்டாலும், இரவு வரை நடிப்பார். இரவும் படப்பிடிப்பு நீண்டாலும் அடுத்த நாள் காலை வரை தொடர்ந்து நடிப்பார். காலை கொஞ்சம் தாமதமாக படப்பிடிப்பை தொடங்கலாம் என கூறினாலும் ‘அதெல்லாம் வேண்டாம். நான் குளித்துவிட்டு வந்துவிடுகிறேன். அப்படியே படப்பிடிப்பை தொடர்வோம்’ என்பார். இவருடன் பணியாற்றும் மற்றவர்தான் தடுமாறுவார்களே தவிர விஜயகாந்த் தடுமாற மாட்டார்” எனவும் அப்பேட்டியில் டி.சிவா கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

google news
Continue Reading

More in Cinema News

To Top