விஜய் ஆண்டனி படத்தில் கேப்டன்...எந்த மாதிரி நிலைமைல நடிக்கிறார்னு பாருங்க..!
தமிழ் சினிமாவில் சுமார் 150 படங்களுக்கு மேல் நடித்து ரசிகர்களிடம் கேப்டன் என்ற பெயருடன் இன்னும் நல்ல மரியாதையுடன் பேர் வாங்கி இருப்பவர் நடிகர் விஜயகாந்த். 2011 லிருந்து 2016 வரை சட்டமன்ற எதிர்கட்சி தலைவராக பொறுப்பேற்று அரசியலிலும் கொடிகட்டி பறந்தவர்.
அந்த நேரத்தில் முதலமைச்சராக இருந்த ஜெயலலிதாவை எதிர்த்து சட்டமன்றத்தில் சரமாரியாக கேள்விக் கனைகளை தொடுத்ததன் மூலம் மேலும் மக்கள் மத்தியில் உயர்ந்த அந்தஸ்தை பெற்றார். இதனிடையில் தான் சிறுநீரக கோளாறு மற்றும் அறுவை சிகிச்சையினால் உடல் நிலை மிகவும் மோசமடைந்தது.
இந்த நேரத்தில் அவரது அரசியல் பொறுப்புகளை அவரது மனைவி பிரேமலதா தான் கவனித்து வருகிறார். இந்த நிலையில் இயக்குனர் விஜய் மில்டன் இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடிக்கும் மழை பிடிக்காத மனிதன் என்ற படம் தயாராகி வருகிறது. இந்த படத்தில் நடிகர் விஜயகாந்த் நடிப்பதாக விஜய் மில்டன் தெரிவித்திருந்தார்.
ஆனால் அவரின் மோசமாக உடல்நிலையினால் அவர் நடிப்பாரா? இல்லையா? என்ற சந்தேகம் எழுந்தது. ஆனால் விஜய் மில்டன் கேப்டனை தவிர்த்து மற்ற காட்சிகள் எல்லாம் படமாக்கப்பட்டு விட்டது. அவரது காட்சி மட்டும் இருக்கிறது. கண்டிப்பாக அவர் படத்தில் இருக்கிறார். ஒன்று நடிப்பார் இல்லை அவரது குரல் மட்டும் படத்தில் ஒலிப்பது போன்று இருக்கும் என அவரது உடல்நிலையை வைத்து தான் சொல்ல முடியும் என இயக்குனர் கூறினார்.