பிடிக்காத படத்தை ராவுத்தருக்காக ஓகே செய்த கேப்டன்… தியேட்டரை அசரடித்த வசூல் வேட்டை!...

கேப்டன் பிரபாகரன் கதையை முதன்முதலில் கேட்டபோது, இந்தக் கதையைப் பண்ணலாமா என்று யோசித்திருக்கிறார் விஜயகாந்த். கதை சொல்ல வந்த இயக்குநர் ஆர்.கே.செல்வமணியையும் அவர் திருப்பி அனுப்பிவிட்டாராம். பின்னர் என்ன நடந்தது... எப்படி கேப்டன் விஜயகாந்த் அந்தக் கதையை ஒப்புக்கொண்டு நடித்தார்?

இதையும் படிங்க: ரஜினியுடன் போட்டி போட்டு மண்ணைக் கவ்விய படங்கள்… அதே கதி தான் சூர்யாவுக்குமா?

புலன் விசாரணை மிகப்பெரிய ஹிட்டடித்த நிலையில், அந்த வெற்றியை அடுத்து உடனே விஜயகாந்த் - ஆர்.கே.செல்வமணி கூட்டணியில் மீண்டும் படம் பண்ணலாம் என இப்ராஹிம் ராவுத்தர் முடிவெடுத்திருக்கிறார். ஆர்.கே.செல்வமணியும் இதை ஒப்புக்கொள்ளவே ஒரு கதை தயார் செய்யும்படி சொல்லியிருக்கிறார் இப்ராஹிம் ராவுத்தர்.

வீரப்பன் கதையைப் பின்புலமாகக் கொண்ட கதையைத் தயார் பண்ணுவதாகச் சொன்ன செல்வமணியின் யோசனை ராவுத்தருக்கும் பிடித்துப்போனதாம். இதையடுத்து, கதாசிரியர் ஜான், ஒரு ஸ்டில் போட்டோகிராஃபர், டிரைவர் உள்பட நான்கு பேராக ஒரு ஜிப்ஸி ஜீப்பில் தென்னிந்தியா முழுவதும் கிட்டத்தட்ட 45 நாட்கள் ஆர்.கே.செல்வமணி பயணித்திருக்கிறார்.

சென்னை திரும்பியதும் கதை பற்றி சொல்ல விஜயகாந்தின் அலுவலகத்துக்குச் சென்றிருக்கிறார் ஆர்.கே.செல்வமணி. அப்போது இப்ராஹிம் ராவுத்தர் இல்லாத நிலையில், விஜயகாந்திடம் சொல்லியிருக்கிறார். அதைக்கேட்டுவிட்டு திருப்தியடையாத அவர், செல்வமணியைத் திருப்பி அனுப்பியிருக்கிறார்.

அதன்பிறகு ராவுத்தரிடம் இதைச் சொன்னபோது, 'அப்பாடி அவரு ஓகே சொல்லிடுவாரோனு பயந்துட்டேன்’ என்று விளையாட்டாகச் சொன்னாராம். இதைக் கேள்விப்பட்டு ராவுத்தரை விஜயகாந்த் செல்லமாகக் கடிந்துகொண்டாராம். அதன்பின், விஜயகாந்தை ராவுத்தர் சமாதானப்படுத்த, 'நான் என்ன நினைச்சாலும் சரி; அவன் சொன்னா சரியாத்தான் இருக்கும்.

இதையும் படிங்க: செல்லாது… செல்லாது.. ஜோதிகாவின் முதல் படம் அஜித் கூட இல்ல… விஜய் படம் தானாம்…

Related Articles
Next Story
Share it