போங்காட்டம் ஆடி பிரியாணி வாங்கி கொடுத்த விஜயகாந்த்!. நம்ம கார்த்தி பருத்தீவீரன்ல பண்ணுவாரே அதேதான்!

விஜயகாந்த் என்றாலே எல்லோருக்கும் நினைவுக்கு வருவது அவர் எப்போதும் மற்றவர்களை பற்றி யோசிப்பார் என்பதுதான். தன் கண்ணுக்கு தெரிந்து யாரும் பசியோடு இருக்கக் கூடாது, கஷ்டத்தோடு இருக்கக்கூடாது என நினைப்பவர் அவர். அதனால்தான், எப்போதும் தன்னால் முடிந்த உதவிகளை செய்து கொண்டே இருந்தார்.
நடிகர், தயாரிப்பாளர், நடிகர் சங்க தலைவர் என்பதையெல்லாம் தாண்டி ஒரு நல்ல, இரக்க சுபாவம் கொண்ட, தர்ம சிந்தனை கொண்ட மனிதராகத்தான் அவர் மக்களின் மனதில் இடம் பிடித்தார். அதற்கு காரணம் அவரின் சுபாவம்தான். மிகவும் எளிமையானவர், பந்தா செய்ய மாட்டார், எதையும் நேரிடையாக சொல்லிவிடுவார், உள்ளொன்று வைத்து புறமொன்று பேச மாட்டார் என்பது அவரின் சிறப்பு.
இதையும் படிங்க: விஜய் பாட்டுக்கு ‘ஓகே’ சொல்லிட்டு மீனா பட்ட பாடு… இப்படி புலம்ப வச்சிட்டாங்களே…!
சினிமாவில் சரியான வாய்ப்புகள் இல்லாத நேரத்தில் பல அவமானங்களை சந்தித்து வளர்ந்தவர்தான் விஜயகாந்த். உணவில் கூட பாகுபாடு இருப்பதை பார்த்து கோபப்பட்டவர் இவர். அதனால்தான், ‘நாம் வளர்ந்து பெரிய நடிகரான பின் எல்லோருக்கும் ஒரே மாதிரி சாப்பாடு போட வேண்டும் என முடிவெடுத்தார். அதை செய்தும் காட்டினார்.
படப்பிடிப்பு மட்டுமல்ல. தி.நகரில் இருந்த அவரின் அலுவகத்தில் எப்போது போனாலும் யார் வேண்டுமானாலும் சாப்பிடலாம் என்கிற நம்பிக்கையை கொடுத்தவர் அவர். சினிமாவில் கஷ்டப்பட்ட உதவி இயக்குனர்கள் மற்றும் சின்ன நடிகர்களின் பல நாட்கள் பசியை போக்கியவர் அவர்தான்.
சினிமாவில் வளர்ந்த பின்பும் மட்டுமல்ல சினிமாவுக்குள் நுழைவதற்கு முன்பும் அவர் அப்படித்தான். தி.நகரில் உள்ள ரோகினி விடுதியில் நண்பர்களுடன் தங்கி சினிமாவில் வாய்ப்பு தேடி வந்தார். அந்த விடுதியில் சீட்டாட்டம் மிகவும் பிரபலம். விஜயகாந்தும் சீட்டு விளையாடுவார்.
யாருக்கும் தெரியாமல் சில கார்டுகளை கீழே வைத்திருப்பாராம். அதை எடுத்து வெற்றி பெற்றது போல் காட்டி பணத்தை வாங்கி விடுவாராம். அந்த பணத்தை அங்கிருக்கும் தனது நண்பர்களுக்கு பிரியாணி வாங்கி கொடுப்பாராம். இதுபோல பல நாட்கள் செய்திருக்கிறாராம். பருத்திவீரன் படத்தில் கார்த்தி இதுபோல சீட்டாட்டத்தில் கஞ்சா கருப்புவை ஏமாற்றி அவரிடமிருந்து பணத்தை பிடுங்குவது போல காட்சி அமைத்திருப்பார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.