சின்ன நடிகருக்காக படப்பிடிப்பையே தள்ளிவைத்த விஜயகாந்த்… இப்படி எல்லாம் கனவுல கூட நடக்காது…

Published on: October 22, 2022
விஜயகாந்த்
---Advertisement---

விஜயகாந்த் எவ்வளவு பெருந்தன்மையான நடிகர் என்பதை நாம் அனைவரும் அறிவோம். உதவி என்று தேடி வருபவர்களுக்கு, அள்ளி கொடுப்பவர் விஜயகாந்த். தன் முன்னால் ஒருவர் உணவு இன்றி பசியோடு இருந்தால் முதல் வேலையாக அவரை சாப்பிட வைத்துவிட்டுத்தான் மறுவேலை பார்ப்பார்.

படப்பிடிப்பில் தனக்கு என்ன வகையான சாப்பாடு பரிமாறுகிறார்களோ, அதே வகையான சாப்பாட்டைத்தான் சக நடிகர்களுக்கும், ஊழியர்களுக்கும் பரிமாறுவார். அவருடன் பழகியவர்கள் பலரும் பல பேட்டிகளில் விஜயகாந்த்தின் உதவும் மனப்பான்மை குறித்து சிலாகித்து பேசியிருக்கிறார்கள்.

Vijayakanth
Vijayakanth

விஜயகாந்த் நடிகர் சங்கத்தலைவராக இருந்தபோது, ஒருமுறை சக நடிகர் நடிகைகளுடன் மதுரைக்கு ஒரு விழாவிற்குச் சென்றுவிட்டு ரயிலில் மீண்டும் சென்னைக்கு திரும்பிக்கொண்டிருந்தார். அப்போது ரயிலில் சக நடிகர்கள் யாரும் சாப்பிடாமல் இருப்பது விஜயகாந்த்திற்கு தெரியவந்தது.

உடனே செயினை பிடித்து ரயிலை நிப்பாட்டிய விஜயகாந்த், வெகு தூரம் நடந்துச்சென்றார். அங்கே ஒரு ஊரில் உள்ள ஒரு ஹோட்டலில் சமைத்துவைத்திருந்த அனைத்தையும் ஆள் வைத்து ரயிலுக்கு கொண்டு வந்தாராம் விஜயகாந்த். இச்சம்பவத்தை நம்மால் நம்பமுடியவில்லை என்றாலும் நிஜமாகவே நடந்த சம்பவம் இது. இவ்வாறு உதவி செய்வது என்று இறங்கிவிட்டால் அவரை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது.

Vijayakanth
Vijayakanth

இதுமட்டுமல்ல. படப்பிடிப்பில் கூட தன்னுடன் நடிக்கும் சக நடிகர்களிடம் பெருந்தன்மையாய் நடந்துகொள்பவர் விஜயகாந்த். இவ்வாறு ஒரு முறை “புலன் விசாரணை” திரைப்படத்தின் படப்பிடிப்பின்போது ஒரு நாள் சக நடிகரான சரத்குமாருக்கு கழுத்தில் அடிபட்டு நரம்பில் பாதிப்பு ஏற்பட்டது. அவரை மருத்துவமனையில் அனுமதித்திருந்தனர். இந்த செய்தியை கேள்விப்பட்ட பலரும் சரத்குமார் இனிமேல் நடிக்க வரமாட்டார் என்றே முடிவு செய்துவிட்டனர். ஆதலால் சரத்குமாரை ஒப்பந்தம் செய்த தயாரிப்பாளர்கள் பலரும் அவரது ஒப்பந்ததை ரத்து செய்தனர்.

Pulan Visaranai
Pulan Visaranai

ஆனால் விஜயகாந்த் தயாரிப்பாளரிடம் “புலன் விசாரணை திரைப்படத்தில் சரத்குமாரை நாம் ஒப்பந்தம் செய்துவிட்டோம். ஆதலால் அவர் குணமாகி வரும்வரை நாம் காத்திருப்போம்” என கூறி படப்பிடிப்பை இரண்டு மாதங்கள் தள்ளி வைத்தாராம். மேலும் சரத்குமார் குணமாகி படப்பிடிப்பிற்கு திரும்பியபோது அவரை நன்றாக கவனித்துக்கொண்டாராம் விஜயகாந்த்.

சரத்குமார் அந்த காலத்தில் வளர்ந்து வந்த நடிகர்தான். ஆனால் விஜயகாந்த் அப்போது டாப் ஸ்டார்களில் ஒருவர். அப்படிப்பட்ட உச்ச நட்சத்திரமான விஜயகாந்த் ஒரு வளர்ந்து வரும் நடிகருக்காக படப்பிடிப்பையே தள்ளி வைத்தது ஆச்சரியத்தை ஏற்படுத்துகிறது. இது விஜயகாந்த்தின் பெருந்தனமையான மனதை காட்டுகிறது.

Arun Prasad

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.